பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அத்தகைய பிரச்சினை ஒன்றும் இங்கு எழவில்லை. மேலே கூறிய நேர ஒதுக்கீடு எதுவும் பாண்டிப்பிரானுக்கு இல்லை. எனவே நேரம் காலம் பாராது அவனிடம் சென்று பெறலாம் என்பது உண்மையானால் 'வந்து முந்துமினே' என்று அடிகளார் கூறியது வேண்டா கூறலாகும். அருள் நிலையில் நின்று பாடும் அடிகளார் வேண்டாத ஒரு சொல்லைக்கூட கூறமாட்டார். எனவே சற்று நின்று நிதானித்தால் வந்து முந்துமினே' என்ற கூறியதற்குரிய உண்மைப்பொருள் உடனே விளங்கிவிடும். பாண்டிப்பிரானுக்கு நேரம் காலம் எதுவும் இல்லை. ஆனால், பருவுடம்புடன் வாழும் அடியவர்க்கு வாழும் காலம் அளவிடப்பட்டுள்ளது. எனவே, நாள் அளவிடப் பட்டுள்ளது என்பதை நினையாமல் நாளை பார்த்துக் கொள்ளலாம், அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம், அறுபது வயதுக்குமேல் இதில் ஈடுபடலாம்' என்று நினைப்பவரைப் பார்த்து அடிகளார் தரும் எச்சரிக்கைதான் 'முந்துமினே' என்பதாகும், ஏன் முந்த வேண்டும்? தம்முடைய காலம் என்று முடியும் என்று தெரியா தாகையால் காலம் உண்டாகவே காதல் செய்து முந்துமினே' என்று முடிக்கின்றார் அடிகளார். 531ஆம் பாடலின் இரண்டாம் அடியில் பாண்டி மன்னனும், நான்காம் அடியில் ஆலவாய்ச் சொக்கனும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். ஆனால் இப்பதிகம் முழுவதிலும் சொக்கனைப் பாண்டியனார் என்றும், பாண்டிப்பிரான் என்றும் தென்னவன் என்றுமே குறித்துள்ளார். ஆக, பாண்டியன் என்ற சொல்லைப் பாண்டிநாடே பழம்பதியாகக் கொண்ட சொக்கனுக்கு உரிமையாக்கி யிருப்பதால், இடைக்கால மன்னனாகிய வரகுண பாண்டியனைக் குறிக்கப் பாண்டியன் என்ற