பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 461 அந்த இன்பம் ஆனந்தமாக மாறும்போது நான் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது. நான் முற்றிலும் மறைந்துவிட்டபோது இன்பம்மட்டும் தனித்து நிற்கின்றது. ஆனாலும், அந்த இன்பத்தின் அடியில் ஒருசிறு கடுகளவாக 'நான் இருந்துகொண்டுதான் இருக்கும். முற்றிலும் இன்பவடிவு என்று கூறினாலும் அந்த இன்பத்தை அனுபவிக்கும் நான் அந்த இன்பத்துள் அமிழ்ந்து இருக்கத்தான் செய்யும். இந்த இன்ப அனுபவம் வளர்ச்சியடைந்து உச்ச கட்டத்தை அடைகின்ற நேரம் ஒன்றுண்டு. அப்பொழுது இந்த நான் இருக்கிறதோ, இல்லையோ என்று ஐயுறும்படி சிறுத்துவிடுகிறது. இறைப்பிரேமை (Divine Ecstasy) என்று சொல்லப்படும் இந்த இன்ப அனுபவம், உச்ச கட்டத்தை (climax) அடையும்போது உள்ளே அமிழ்ந்திருக்கும் ‘நான்’ முற்றிலும் செயலிழந்துவிடுகிறது. இறையனுபவம் அலைபோல உயர்ந்தும் தாழ்ந்தும் வருகின்ற ஒன்றாகும். அது உயர்ந்துள்ள நிலையில் நான் பொருளற்ற தாகிவிடுகிறது. அந்த நிலையில் இவர்கள் செய்யும் செயல், பித்தர் செயல்போலக் காணப்படும். மறுபடி, அந்த அனுபவ அலை தாழ்ந்து வரும்போது 'நான்’ ஒரளவு தலைதுாக்கும். இந்த நிலையில் இருக்கின்றபொழுது தம்முடைய முழு அனுபவத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் நிலை தோன்றுகிறது. அப்படிப் பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, தாங்கள் ஏதோ சில செயல்களைச் செய்ததாக இவர்கள் நினைக் கின்றனர். இப்பொழுது நான் மேலும் சிறிது வளர்ச்சி யடைகிறது. இன்ப அனுபவத்தின் முழு வளர்ச்சியை அடையத் தாங்கள் ஏதோ ஒன்றைச் செய்ததாக அவர்கள்