பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நினைக்கின்றனர். . உண்மையில் அச்செயல்களைச் செய்தார்களா இல்லையா என்பதைப் புறத்தே உள்ள யாரும் அறிந்து கூறமுடியாது. இறையனுபவத்தின் உச்ச கட்டத்தில் இருக்கும்போது, அனுபவிப்பவன், அனுபவம் என்ற இரண்டும் ஒருங் கிணைந்து அனுபவம்மட்டுமே பெரிதாக நிற்கின்றது. அனுபவிப்பவன் அதனுள் மூழ்கிவிடுகிறான். அந்நிலையில் பாடல் எதுவும் வெளிவருவதில்லை. அனுபவ எல்லை குறைந்த நிலையில் திரும்பிப் பார்ப்பதும் தாம் ஏதோ செய்ததாகக் கருதுவதும் இவர்களுக்கு உண்டு. அந்த நிலையில் வெளிவந்த பாடல்களே பிடித்த பத்தின் பத்து பாடல்களும். நாம, ரூபம் கடந்ததாகிய ஒருபொருள், பற்றலாவதோர், நிலையிலாத ஒரு பொருள், நறு மலரில் தோன்றும் நாற்றம்போல் எங்கும் நிறைந்ததாகவுள்ள ஒரு பொருள், தம்முள் நுழைந்ததை இவர்கள் உணர்கின்றனர். அப்பொருள் ஒளிவடிவாக உள்ளே நுழைந்ததையும் இவர்கள் உணர்கின்றனர். அப்படியிருக்கச் சிக்கெனப் பிடித்தேன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்றால், பிடித்தேன் என்று உணர்வது இவர்கள் உள்ளத்தில் தோன்றிய ஒர் உணர்வாகும். பிடிபடுவதற்கு எவ்வித வடிவோ உருவோ ஒன்றும் இல்லாதது அப்பொருள். அதனை நன்கு உணர்ந்த இப்பெரியவர்கள் சிக்கெனப் பிடித்தேன் என்று கூறினால், உள்ளே நுழைந்த அப்பொருளை வெளியே போகவிடாமல் தடுத்துநிறுத்தி அதிலேயே தாங்களும் இணைந்துவிட்டதாக உணர் கின்றார்கள். அப்பொருளுடன் தாம் முற்றிலுமாக இணைந்துவிட்டோம் என்று கூறாமல், அப்பொருளை