பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 463 இறுகப் பற்றிக்கொண்டோம் என்று கூறுவது உலகியல் முறையாகும். அடிகளார் பாடல்களில் சிக்கெனப் பிடித்தேன் என்று வரும் தொடர்க்குமுன் வரும் சொற்களை முன்பின்னாக வரிசைப்படுத்திக் கண்டால், பிடித்த பத்தின் நுணுக்கத்தை ஒரளவு அறிந்துகொள்ளலாம். சிக்கெனப் பிடித்தேன் என வரும் தொடர் எல்லாப் பாடல்களுக்கும் பொதுவாதலால், அதற்கு முன்னருள்ள தொடர்களைக் கீழ்க்காணும் முறையில் வரிசைப்படுத்திக் - கொள்வது நலம். அடிகளார் காலத்திற்கு முன்னர், ஏன், பின்னரும்கூட, இந்த உடலைக் கழித்த பிறகே அவன் திருவடிகளைச் சென்று அடையமுடியும் என்று பலரும் கூறியுள்ளனர். அடிகளாரும் பல பாடல்களின் இவ்வுடம்பை நீத்து அவனுடைய திருவடிகளைப் பற்றவேண்டும் என்று பாடியுள்ளார். இந்தப் பொதுக்கருத்துக்கு மாறாக, ஒரு புதிய சிந்தனையை, புதிய அனுபவத்தைப் பிடித்த பத்துப் பாடல்கள் வெளியிடுவதைக் காணலாம். அதற்கு உதவியாக, பிடித்தேன் என்பதற்குமுன் வரும் தொடர்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்திக் கொள்ளல் நலம். இம்மையே (538), இருள் இடத்து (539), எய்ப்பு இடத்து (540), இறவிலே (54) எனவரும் தொடர்களை வைத்துக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினால், இரண்டு கருத்துக்கள் எஞ்சுகின்றன. - . . முதலாவது இறைப் பிரேமையின் உச்சகட்டத்தை அடைந்துவிட்ட அடிகளார் அதிலிருந்து இறங்கிவந்து, அந்த உச்சகட்டத்தைத் தாம் பற்றியிருந்ததை நினைவு