பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உதாரணமாக, இம்மையிலே யான் ፵...6ü}6ûፖ இடைவிடாது தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் என்றும், எய்ப்பிடத்து யான் உனை இடைவிடாது தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் என்றும் கொள்ளவேண்டும். நாவரசர் பெருமானின் ஈசன் தன் பல் கணத்து எண்ணப்பட்டு இறுமாந்து இருப்பன்கொலோ (திருமுறை: 4-9-1) என்ற செய்தி அனுபவத்தின் ஒருநிலையாகும். அடிகளாரின் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே’ என்பது அந்த அனுபவத்தின் உச்சகட்ட நிலையாகும். சிக்கெனப் பிடிக்கும் இந்தச் செயல் தமக்குமட்டும் உரியதன்று, மானுட சாதி முழுவதற்கும் பொதுவானது என்பதை அறிவுறுத்தவேபோலும் எம்குடி முழுது ஆண்டு (536) என்றும், எம்குடி முழுது ஆண்ட (54) என்றும், எம்பொருட்டு உன்னை (536 என்றும் கூறியருளிமை இங்கு நினைவிற்கொள்ளத் தகும். நம்பிக்கை இழந்து வாழும் மானுட சாதிக்கு மாபெரும் நம்பிக்கையை ஊட்டி, வலுப்பெறச் செய்து இடைவிடாது தொடர்ந்து முயன்றால், மறுமைக்கே உரியது என்று பலராலும் சொல்லப்பெறும் இறை அனுபவத்தை இம்மையிலேயே பெறமுடியும் என்று சொல்கிறார். அவன் அருள் அதற்கும் வழிகாட்டும், துணைபுரியும் என்பதை அறிவுறுத்துவதே பிடித்த பத்தின் திரண்ட பொருளாகும். குளத்து நீரில் ஒரே அளவு உயர்ந்து மலர்ந்துநிற்கின்ற தாமரைகள்போல் இருப்பினும் அதில் ஒரு சில மலர்கள் நீர் மட்டத்திற்குமேல் ஒர் அடி உயர்ந்துநிற்பதுபோல் திருவாசகத்தின் 658 மலர்களில் சில உயர்ந்து உள்ளன, அவற்றுள் இந்தப் பத்து மலர்களும் ஒரடி உயர்ந்து நிற்கின்றன எனலாம்.