பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 465 இறந்தபின்னரே ஆன்மா திருவடியைப் பற்றமுடியும் என்ற பொதுநம்பிக்கையைத் தகர்த்து, இறவிலே இறப்பதற்கு முன்னரே) சிக்கெனப் பிடித்தேன் என்கிறார். மனித மனமும், ஏன், அதனோடு சேர்ந்த உயிரும்கூட, இன்பத்தை நாடிச்செல்வது இயல்பு. இவ்வளவு அரும்பாடு பட்டு ஏன் சிக்கெனப் பிடித்தார், எதைச் சிக்கெனப் பிடித்தார் என்ற வினாக்களுக்கு விடைகூறுவார் போல இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்கிறார். ஆனால், இந்த இன்பவடிவினன் எத்தன் என்பதை உணர்கின்றார். காரணம் தமக்குக் கிடைத்த உச்ச கட்ட அனுபவம் வந்துவந்து போவதை அனுபவ பூர்வமாக அறிந்துகொண்டார் ஆதலின், உச்ச கட்ட அனுபவமாக வுள்ள அவனை எத்தன் என்றார். மேலே கூறிய முறையில் இறைப் பிரேமையின் உச்சகட்டமாக இருக்கின்ற இறைவனை உலகத்தார் கூற்றுக்களுக்கு மாறாகத் தாம் பிடித்துக்கொண்டதைக் கூறுகிறார். பின்னே வருகின்ற சமுதாயத்திற்கு இதைமட்டும் கூறினால் பயனில்லை என்று நினைத்த அடிகளார், அதற்குரிய முயற்சியில் உயிர்கள் ஈடுபடும்போது என்ன செய்யவேண்டும் என்பதை இரண்டு தொடர்களில் பேசுகின்றார். தாம் என்ன முயற்சியை மேற்கொண்டாரோ அந்த முயற்சியில் எப்படி ஈடுபட்டாரோ அதனை யான் உனைத் தொடர்ந்து (544) என்ற தொடராலும் இடை விடாது (537) என்ற தொடராலும் இரண்டு பாடல்களில் தனித்தனியாகக் கூறியுள்ளார். இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து யான் உனை இடைவிடாது தொடர்ந்து என்று ஆக்கி, அதனை மத்திம தீபமாகக் கொண்டு, ஒவ்வொரு பாடலோடும் அதனை இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும். தி.சி.சி.IV 31