பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 43 திருமூலர் வாக்கு மாபெரும் சித்தராகிய திருமூலரே, இவ்வாறு கூறினார் என்றால், ஏனையோர்பற்றிப் பேசவே தேவையில்லை. பருவுடம்போடு மனிதன் வாழ்கின்றவரையில் மனம்அதில் தோன்றும் ஆசை.பொறி, புலன்கள் என்பவை இருந்தே தீரும். முன்னர்க் கூறியபடி இந்தப் பொறி, புலன்களை இறைவனிடம் செலுத்தும் ஆசை, மனத்திடைத் தோன்றுமேயானால் அந்த ஆசை வரவேற்கத் தக்கதே ஆகும். தன்னிச்சையாகச் செயற்படும் பொறி, புலன்களை அவ்வாறு மடைமாற்றம் (Sublimation) செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும். இந்த மடைமாற்றம் செய்யவேண்டும் என்ற ஆசை தோன்றுவதேகூட இந்த மனத்தில்தான். இத்தகைய ஓர் ஆசையைத் தோற்றுவிக்கவும், அதனை வளர்க்கவும் மனிதன் இறையருளை நாடவேண்டி உள்ளது. இதனையே அடிகளார் ஆசைப்பத்தில் கூறுகிறார். 418. கருளக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஒ இருளைத் துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் - அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் - கண்டாய் அம்மானே 1 அஞ்ஞானமும் குற்றமும் நிறைந்த இவ்வுலகத்தை 'இருள் என்கிறார் அடிகளார். இந்த இருண்ட பகுதியிலிருந்து ஒளிமயமான சிவலோகத்திற்குச் செல்ல ஆசைப்படுகிறார். அதற்கு என்ன வழி சிவலோகத்திற்குரிய தலைவனாகிய இறைவன் அங்கிருந்தபடியே அந்த இடத்திற்குக் வருக என்று தம்மை அழைக்க வேண்டும்