பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்ற விண்ணப்பத்தை இப்பாடலின் மூன்று, நான்காம் அடிகளில் தெரிவிக்கின்றார். இதிலொரு புதுமை இருக்கிறது. இருட்டில் இருக்கிறார் அடிகளார். இதனைத் துறந்துபோதல் வேண்டுமாயின், முதலில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்பது உறுதியாகத் தெரியவேண்டும். இரண்டாவதாக வழி தெரியவேண்டும். இம்மாதிரி நேரங்களில் ஒளிக்கு உரிமையாளன் இங்கே வந்து இவரைக் கூட்டிச் செல்வதுதானே முறை அதை விட்டுவிட்டு எங்கோ ஒர் இடத்தில்(சிவலோகத்தில் இருந்துகொண்டு, இங்கே வா என்று கூறினால் அந்தப் பரிவான சொற்களை ஏற்றுக்கொண்டு செல்ல அடிகளாருக்கு ஆற்றல் உள்ளதா? உண்டு என்று கூறுவதை, வேறுவகையாக முன்னிரண்டு அடிகளில் அடிகளார் குறிக்கின்றார். கழற்சேவடி என்னும் பொருளைத் திருப்பெருந்துறையில் இவருக்குத் தந்து, இவரை ஆட்கொள்ளவும் செய்தாரல்லவா? எனவே, அடிகளாரைப் பொறுத்தமட்டில் குருவைத் தெரியும்; அவர் திருவடிகளையும் தெரியும்; பொதுவினில் வருக என்று கூறியமையின் குருநாதர் குரலும் தெரியும். அந்தத் தைரியத்தில்தான், வேறெங்கிருந்து இங்கே வாவென்று குருநாதர் அழைத்தாலும் அடிகளாரால் செல்ல முடியும். குருநாதர் திருவடியை liJ இரண்டு உதவிகள் உள்ளன. முதலாவது 'இங்கே._.} {58}ژئي வா’ என்று குருநாதர் கூறினால் அந்த நாத தரிசனம் இவருக்கு வழிகாட்டும். இரண்டாவது, போகுமிடம் ஒளி வடிவாக இருத்தலின் எளிதாக அந்த இடத்தை இனங்கண்டு செல்லமுடியும். வேறு வகையாகக் கூறினால் முதலில் நாத தரிசனமும், இரண்டாவது சோதி தரிசனமும் கிட்டும் என்க. திருப்பெருந்துறையில் கழற்சேவடிகளைத் தந்து * .3 - א: ஆட்கொண்டவருக்கு இப்பொழுது ஒரு கடமை உ ள்ளது.