பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்ஜின் என்ற ஒரு பகுதி நம் கண்ணுக்குத் தெரியாமல் அதனுள்ளே இருக்கிறதென்பது பொருள். அதுபோல இக்கூடம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்து செல்கின்றது என்றால், கூடத்தினுள் ஆன்மா என்ற ஒன்று மறைந்து நிற்கின்றது என்பது தெளிவாகிறது. இறுதிக் காலத்தில், இக்கூடம் அழியும்பொழுது, ஆன்மா வேறெங்கும் சென்றுவிடாமல் இறைவனுடைய திருவடியின் அணித்தே சென்று தங்க வேண்டும் என்ற கருத்தைத்தான் 'திருமலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப் பட்டேன்’ என்று பாடுகிறார். 422 அளி புண் அகத்துப் புறம் தோல் மூடி அடியேன் உடை யாக்கை புளியம்பழம் ஒத்து இருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஒ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 5 அளிபுண்-உடம்பின் இயல்பைப் பெரிதும் கெடுக்கின்ற புண. உடம்பின் கேவலமான தன்மையை முதலடியில் பேசுகிறார். இவ்வளவு மட்டமான உடம்பின்மேல் பற்றுக் கொண்டிருப்பது சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகும். ஆனால், இதற்கு மாறாக, தாம் இந்தக் கேவலமான உடம்பினிடத்துப் பற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறுகிறார். அந்தப் பற்றுக்கூட, ஆன்மா என்றும் உடம்பு என்றும் தனித்தனியே பிரித்துக்கான முடியாதபடி ஒன்றியிருந்து விட்டது. அதனையுே புளியம் பழம் ஒத்திருந்தேன்' என்கிறார் அடிகளார்.