பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 51 ஆனால் உண்மையில் அவர் கூறவந்தது புளியம்காய் ஒத்திருந்தேன் என்பதுதான். பழம் என்ற சொல் இங்குக் காய் என்ற பொருளில் அமைந்துள்ளது. பழம் என்ற சொல்லையே வைத்துக்கொண்டு பொருள் செய்தால், இந்த உடம்போடு எவ்விதத் தொடர்பும் பற்றுமில்லாமல், ஒட்டில் ஒட்டாத புளியம் பழத்தைப் போல் இருந்தேன் என்று அழகாக பொருள் கூறலாம். ஆனால், இவ்வாறு பொருள் கூற முடியாமல் தடுப்பது அடுத்துவரும் இருந்தும் என்ற சொல்லாகும். புளியம் காயைப்போல, உடம்பு ஆன்மா என்ற வேறு பாடின்றி நான் ஒட்டிக்கொண்டிருந்தும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்ஆர் அமுதே' என்கிறார். 'நீ ஆட்கொண்ட பின்பும், இந்த உடம்பை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கின்ற நான், பெரிதும் இரக்கத்திற் குரியவன் என்று நீ சொல்ல வேண்டும். அச்சொல்லை நான் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார். - 423. எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்க கில்லேன் இவ் வாழ்க்கை - வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச் சேவடியானே முத்தா உன் தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன் - கண்டாய் அம்மானே 5 எய்த்தேன் என்பது இளைத்தேன் என்ற பொருளைத் தரும் ஈடுசெய்ய முடியாத ஒரு பொருள் கிடைத்து, அதனை ஒரளவு அனுபவித்த பிறகு அப்பொருள் கையை