பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 விட்டு நழுவிவிட்டால், அது மறுபடியும் எப்பொழுது கிட்டும் என்று ஒயாது நினைந்து நினைந்து ೭–ು இளைத்தல் உலகியற்கை திருப்பெருந்துறை அனுபவம் மறுபடியும் கிட்டாதா கிட்டாதா என்று நினைந்து வருந்தி 'எய்த்தேன் நாயேன்” என்கிறார். வரும் வரும் என்று பொறுமையோடு காத்திருந்தும் அது கிட்டாதபோது வாழ்க்கையே வெறுப்புத் தட்டிவிடுதல் கண்கூடு. அதனையே இனி இங்கு இருக்ககில்லேன்' என்கிறார். பொருளோ கிட்டவில்லை; அப்பொருளில்லாமல் வாழவும் பிடிக்கவில்லை. அப்படியானால் என்ன செய்வது? வாழ்வைத் துறந்துவிடுவது ஒன்றுதான் வழி. ஆனால், அவ்வழியை மேற்கொள்ளத் தமக்கு உரிமை இல்லை என்பதை உணர்கிறார். ஒரு பொருளை ஒர் இடத்தில் ஒருவன் வைத்தான் என்றால், அதனை அங்கிருந்து அகற்ற வேறு யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு பிறர் அகற்றினால் அது திருட்டுக்குற்றம் ஆகிவிடும். எனவே, உடம்பை விரும்பாத அடிகளார், அதனைப் போக்கிக்கொள்ளத் தமக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து, தம்மை இந்த உடம்போடு எவன் இங்கு உலவவிட்டானோ அவனையே பார்த்துத் தயைகூர்ந்து இந்த உடம்பை எடுத்துக் கொள்வாயாக’ என்று கேட்கும் முறையில் 'இவ்வாழ்க்கை வைத்தாய்; வாங்காய்' என்கிறார். இந்த உடலை வாங்கிவிடு என்று கேட்க அவசியம் என்ன நேர்ந்தது? முன்னேறிச் செல்லமுடியாமல் தடுக்கும் இவ்வுடல் போய்விட்டால், சிவபுரம் சென்று அத்தனுடைய முறுவலைக் காணமுடியும் என்கிறார்.