பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 55 வேண்டுமானால் அவன்தான் அதனைத் தரவேண்டுமே தவிர, நாமாகக் சென்றடைதல் இயலாத காரியம். எனவே, வாரா உலகம் 'தந்து' என்றார். தருவதில்கூட இருவகை உண்டு. ஒரு சிலர், இருந்த இடத்தில் இருந்துகொண்டே தம்மை நாடிவந்தவர்க்கு வேண்டுவதைத் தருவர். இரண்டாவது வகையினர், வேண்டுபவர் இருக்குமிடத்திற்குத் தாமே சென்று வேண்டியவற்றைத் தருவர். இந்த இரண்டாவது வகையினரை வள்ளல்கள் என்று தமிழர் கூறினர். அதனையே அடிகளார். இங்கே வந்து இவ்வுலகிடை வந்து வாரா உலகம் தருவானே என்றார். வாரா உலகத்திற்கு ஒருவரை அனுப்பினாலும், அங்கே சென்று அதன் பயனை அனுபவிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும், குருடனுக்கு ஒவியமும், செவிடனுக்கு ஏழிசையும் கிடைத்தாலும் அவர்கள் அவற்றை அனுபவிக்க முடியாது. அதுபோல அந்தக் கருணை வள்ளல் இவ்வுலகிடை வந்து, அந்த வாரா உலகைத் தந்தாலும், ുട്ട് அனுபவிக்க இந்தச் சிற்றுயிர்களுக்குத் தகுதியில்லை. எனவே, முதலில் இந்தச் சிற்றுயிர்களை ஆட்கொண்டு, பின்னர் வாரா உலகம் தரவேண்டும். ஆட்கொள்ளல் என்றால், உயிர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குற்றம் குறைகளைப் போக்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருளாகும். எனவே, தானே இவ்வுலகிடை இறங்கிவந்து உயிர்கட்கு இயல்பாக உள்ள குற்றங்களைப் போக்கி, ஆண்டுகொண்டு, பின்னர் வாரா உலகத்தைத் தருவோன் என்கிறார். இதுவரை சொல்லப்பட்ட அனைத்தும் இந்த உலகிடை நிகழ்ந்தவைகளாகும். அவன் வந்தது இந்த உலகிடைத்தான்; திருவடி தீட்சை தந்ததும், ஆட்கொண்டதும், பரா அமுது ஆக்கிடச் செய்ததும் இவ்வுலகிடைத்தான். அற்புதமான அமுத தாரைகளை எற்புத் துளைதெறும் ஏற்றியதும்