பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4. இவ்வுலகிடைத்தான். அப்படியிருக்க, இந்த உலகை நீத்து, உடம்பை நீத்து ஓடவேண்டும் என்ற ஏண்ணம் ஏன்? இங்கு இருந்துகொண்டு, இந்த உடம்போடு வாழ்ந்து கொண்டு ஏதாவது செய்ய முடியாதா? செய்யலாம் என்கிறார் அடிகளார். அதாவது, இறைவனுடைய ஆயிரம் நாமங்களைப் பரவிக்கொண்டு, ‘எம்பெருமான்' என்று அவன் புகழை ஏத்திக்கொண்டு வாழ்நாள் உள்ளவரையில்) திரிவதே அவ்வழியாகும் என்கிறார். 425. கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு எய்யாது என் தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று ஐயா என்தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 8 கழுமத் தழுவிக்கொண்டு-இறுகத் தழுவிக் கொண்டு, எய்யாது-தவறாமல், இளைக்காமல் சென்ற பாடலில் கூறப்பட்ட கருத்து, சற்று விரிவாக இங்கே பேசப்பெறுகிறது. அவன் புகழைப் பாடிக்கொண்டு திரியவேண்டும் என்று சென்ற பாடலில் கூறினார் அல்லவா? எத்தனை நாள்தான் ஒருவர் திரிய முடியும்? எவ்வளவு சுற்றித் திரிந்தாலும் இறுதியாக, திரிதலை நிறுத்தி ஓரிடத்தில் அமரத்தானே வேண்டும்? அப்படி அமர்கின்ற பொழுது, திரியும்போது செய்த செயலைச் சற்று மாற்றி, இன்னும் ஆழமான முறையில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிறார். அந்த ஒன்று என்ன தெரியுமா? எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் அவன் புகழைப் பாடிக்கொண்டு திரிந்த நிலை போக,