பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 57 இப்பொழுது அவனைக் கண்டுவிட்ட நிலையில் என்ன செய்ய வேண்டும்? திரியும்போது என்ன செய்தார்? அவன் புகழைப் பாடிக்கொண்டு திரிந்தாரல்லவா? இப்பொழுது "வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப உருக வேண்டும் என்கிறார். திரியும்போது மனமும், வாக்கும் அவனிடம் இருந்தன; உடல் சுற்றித் திரிந்தது. இப்பொழுது அந்த உடலுக்குப் புதிய பணி தருகின்றார். அதாவது, கையால் தொழுது அவன் கழற்சேவடிகளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்கிறார். இது உடலுக்குரிய செயல்; வாயால் அரற்றி என்பது மொழிக்குரிய செயல்; அழல் சேர் மெழுகு ஒப்ப உருகுவது மனத்திற்குரிய செயல். எனவே மனம், மொழி, மெய் என்ற மூன்றிற்கும் உரிய பணிகளைத் தந்தாராயிற்று. 426. செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசிச் - சிவபுர நகர் புக்குக் கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண் இணை களி கூரப் படிதான் இல்லாப் பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 9 கடி - மிகுந்த படி ஒப்பு இப்பாடலைப் பாடும்பொழுது திருப்பெருந்துறையில் அடியார் கூட்டத்திடையே இருந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. தம்மை விட்டுவிட்டு அவர்கள் போனதற்குக் காரணம், தாம் இந்தப் பூதவுடலுடன் இருந்ததே ஆகும் என நினைக்கிறார் அடிகளார். அந்த நினைவு வந்தவுடன் இந்த உடலை நீத்து அவர்களைக் காணும் வாய்ப்பைப் பெறவேண்டும் ৫T6াৈ நினைக்கின்றார். இதனையே 'யாக்கைத் திறம் அற (உடம்பின் செயற்பாடு ஒழிய) சிவபுர filéléfi.IV 5