பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நகர்புக்கு. பழ அடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன்’ என்கிறார். 427, வெம் சேல் அனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நான் ஓர் துணை காணேன் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவளத் திரு வாயால் . அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே - 廿 பருவுடலை நீக்க வேண்டும் என்று இப்பதிகத்தின் முதல் ஆறு பாடல்களிலும், ஒன்பதாம் பாடலிலும்-அந்த உடம்புடன் இருந்துகொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை ஏழாம் எட்டாம் பாடல்களிலும் பேசிய அடிகளார், இப்பொழுது புதிய ஒர் ஆசையை வெளிப்படுத்துகிறார். - இறைவனின் ஒளி முகத்தையும், குமிண் சிரிப்பையும் காண ஆசைப்பட்டதாகக் கூறிய அவர், இப்பொழுது வெளியிடும் ஆசை இரண்டு வகையாக நிற்கின்றது. 'அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் என்றால், அஞ்சாதே என்று நீ வாய்திறந்து சொல்ல, நின் திருவாயிலிருந்து வெளிப்படும் அமுதச் சொற்களைக் காதால் கேட்க ஆசைப்பட்டேன் என்பது ஒரு பொருளாகும். அடுத்து, பவளத் திருவாயால் 'அஞ்சாதே என்று சொல்லும்பொழுதே உன் அபயகரம் 'அஞ்சாதே’ என்று காட்டு மல்லவா? அதைக் காணவும் ஆசைப்பட்டேன் என்பது இரண்டாவது பொருள். -