பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்கிறார். இதனைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் காணலாம். பருமையுடைய கல், மலை போன்றவை இரண்டாகப் பிளக்குமேயானால் பெருஞ்சத்தமும் ஓரளவு ஆற்றலும் அதிலிருந்து வெளிப்படும். ஆனால், ஒர் அணு பிளக்கப்படுமேயானால் பேரொலியும், பேரொளியும், உலகை அழிக்கும் பேராற்றலும் வெளிப்படக் காணலாம். சொல் வடிவிலுள்ள மந்திரத்திற்கும் இந்த ஆற்றல் உண்டு. அது ஒரு கண நேரத்தில் தோன்றி மறையும் ஆதலால் நுண்ணிய சொல் என்றும், நொடிய சொல் என்றும் பேசுகிறார். சொல் செய்து' என்று வரும் தொடரை ஊன்றிக் காண்டல் வேண்டும். சொல் செய்து என்பது மரபு பிறழ்ந்த சொற்களாகும். சொல்லைக் கூறினான் என்று சொல்லவேண்டுமே தவிர, சொல்லைச் செய்தான் என்று கூறுவது மரபு வழுவாகும். அப்படியானால் அடிகளார் ஏன் இவ்வாறு கூறவேண்டும்? இந்த இரண்டு சொற்களையும் ஒன்றுசேர்ப்பதன் மூலம் ஒரு மாபெரும் தத்துவத்தை அடிகளார் வெளியிடுகிறார். ஒரு சொல்லைச் சொன்னால், அச்சொல் அதனைக் கேட்பவர் செவிவழிப் புகுந்து அவர் மூளையின் உட்செல்கின்றது. மூளையிலுள்ள நியூரான்கள் என்ற அணுக்கள் இரசாயன முறையில் தொழிற்பட்டுச் சொல்லப்பட்ட சொல்லின் பொருளை அறிகின்றன. பின்னர், அப்பொருளுக்கு ஏற்பத் தொழிற்படவேண்டிய உறுப்புக்களுக்கு உத்தரவு பிறப்பித்து அவற்றைத் தொழிற்படுமாறு செய்கின்றன. சாதாரண மக்களுக்குச் சொல்லப்படும் சாதாரணச் சொற்கள் இப்படித்தான் பணிபுரிகின்றன. -