பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 67 தூக்கி முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமோ 8 மிகச் சிக்கலாக உள்ள இப்பாடலைத் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டுகட்டுச் செய்துகொள்ளுதல் நலம். 'நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையில் புகப் பெய்து’ என்ற தொடரை 'தன்னொடு நிலா வகை முன் எனை நீக்கி, குரம்பையில் புகப் பெய்து’ என்று கொள்ளவேண்டும். அதாவது தன்னோடு, திருவடி இணை பிரியாமலிருந்த என்னை, முதலில் அத்திருவடியி லிருந்து பிரித்து, (பின்னர்த்) திருவாதவூரர் என்ற உடம்பினுள் புகச் செய்தான். • நோக்கி, நுண்ணிய நொடியன சொல் செய்து’ என்றது, (அவன் புகுத்திய திருவாதவூரர் என்ற உடம்பில் நான் வளர்ந்துவருகையில், திருப்பெருந்துறையில் ஒருநாள் குருவடிவுடன் வந்து கருணை பொங்கும் தன் திருவருட் பார்வையை என்மாட்டுச் செலுத்தி, நுண்ணிய சொற்களை ஒரே நொடிக்குள் என்னுள் புகுமாறு செய்தான் என்றபடி அதாவது, துண்மையான மந்திரத்தை ஒரு நொடிக்குள் உபதேசித்தான் என்று கூறுவதால், அந்த மந்திரம் பேராற்றல் வாய்ந்தது என்பது பெறப்படும். ஒரே சொல்லில் திருவாதவூரரை மாணிக்கவாசகராக மாற்ற வேண்டுமானால் அந்தச் சொல் அல்லது மந்திரம் மாபெரும் ஆற்றல் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும், அப்படி ஆற்றலுள்ள ஒன்று ஒரு நொடிப்பொழுதில் தன் பணியைச் செய்து மறையுமே தவிர நீண்டநேரம் நிலைபெறுவதில்லை என்பதை நொடியன சொல் செய்து’