பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'ஐந்தெழுத்தாகிய அவன் திருநாமத்தை எண்ணினேன் இல்லை. இதுதான் செய்யவில்லையென்றாலும், கலை ஞானம் பெற்ற ஞானிகள் அருகில் சென்று என் அறிவையும் வளர்த்துக்கொள்ளவில்லை. ஆதலால், பக்தி வழி, ஞானவழி என்ற இரண்டும் என்னைப் பொறுத்தமட்டில் அடைபட்டுவிட்டன. இவை இரண்டும் இன்மையால் பிறப்பு, இறப்பு என்னும் சங்கிலித் தொடரிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லாத என்னை அடியரில் கூட்டினான்’ என்றபடி, - 434. பொத்தை ஊன் சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க் கூரை இத்தை மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச் சோதி அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 7 பொத்தை உள்ளீடற்ற பருமனானது; அசும்பு - வாயிலிருந்து ஒழுகும் எச்சில் 'இவ்வுடம்புக்கு மெய் என்று யாரோ பெயரிட்டுவிட்ட காரணத்தால், இதனையே மெய்யென்று நம்பி துன்பக் கடலில் வீழ்ந்து உழன்றுகொண்டிருந்தேன், அப்படி யிருந்தும் என்னை அடியரிற் கூட்டியது அதிசயமே” என்றவாறு. 435, நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையில் புகப் பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்துத்