பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 436. உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் - பற்றல் ஆவது ஒர் நிலை இலாப் பரம் பொருள் அப் பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே - 9 மிகவும் ஆழ்ந்து சிந்தித்து, கொண்டுகூட்டும் செய்து, பொருள்கொண்டால்கூட முற்றிலும் விளக்கம் தராத ஒருசில பாடல்கள் திருவாசகத்தில் உள்ளன என்பதைப் பலரும் அறிவர். . திருவாசகப் பாடல்களுக்கு அத்வைத அடிப்படையிலும், யோக அடிப்படையிலும், சித்தாந்த அடிப்படையிலும் பொருள்கண்டுள்ளனர். இந்த மூவகையினரும் செம்மையான முறையில் பொருள்கான முடியாதபடி அமைந்துள்ள சில பாடல்களில் உற்ற ஆக்கையின்’ என்று தொடங்கும் இந்தப் பாடலும் ஒன்று. ஒரளவு முயன்று பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்து பொருள்காண முற்படலாம். ஆக்கையின் உற்ற உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம்போல் (உள்ளதும்) அப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பற்றல் ஆவது ஒர் நிலை இலாப் (ததும் ஆகிய பரம்பொருள்' என்று கொண்டுகூட்டுச் செய்தல் நலம். மலரின்கண் உள்ள நாற்றம், எங்கும் நிறைந்துள்ளது. என்றாலும் மலரின் மணத்தை மிகுதியும் நுகர வேண்டுமாயின் மூலமாகிய மலரினிடத்தேதான் செல்ல வேண்டும். அதேபோன்று பரம்பொருளும் எங்கும், எல்லா இடத்தும் நிறைந்திருந்தாலும், அப்பொருளுடன் இணைந்து