பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து - 71 அதனை அனுபவிக்க வேண்டுமாயின் அதன் மூலத்திற்கே செல்லவேண்டும். மலரைப் பற்றிக்கொள்ள வேண்டுமானால், அதற்கொரு வடிவம் உண்டு ஆதலின் அதனைப் பற்றிக்கொள்ளலாம். ஆனால், இறைப்பொருளைப் பொறுத்தமட்டில் அதனைப் பற்றிக்கொள்வதற்குரிய ஏதேனும் ஒரு வடிவம் உண்டா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்பொருள் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் இருப்பினும், உருவம்தவிர ஏனைய இரண்டு நிலைகளிலும் அதனைப் பற்றிக்கொள்ள முடியாது. வைணவர்கள் கூறும் அர்ச்சாவதார நிலை, உயிர்கள் உய்யும் பொருட்டு, பரம்பொருள் மேற்கொள்ளும் உருவநிலை ஆகும். உருவ நிலையில் கூட அதனைப் பற்றிக் கொண்டோம் என்று நினைத்தால், அதே விநாடியில், பற்றப்பட்ட நிலையைக் கடந்துசென்று அப்பொருள் விளங்குவதைக் காணமுடியும். எனவே, உடம்பினுள் ஒளிந்திருக்கும் உறுபொருளாகிய உயிர், எந்த நிலையிலும் பரம்பொருளைப் பற்றிக்கொண்டோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலையிலும் பற்றிக்கொள்வதற்குரிய நிலை இதுதான் என்று சொல்லமுடியாதபடி உள்ளது என்பதைக் குறிக்கவே பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் (பற்றிக் கொள்வதற்குரிய நிலை இது என்று கூறமுடியாதபடி உள்ளது பரம்பொருள் எனறாா. - "நறுமலர் எழுதரு நாற்றம்போல் என்று கூறிய உவமை எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் காணல் வேண்டும். நறுமலரிடத்து எழுதரு நாற்றம் என்றமையின், அந்நாற்றம் எங்கும் பரவியிருப்பினும் எங்கோ ஒர் இடத்தில் மூலமாகிய ഥദ്ധ് மறைந்துநிற்கின்றது என்பதை அறிவிக்கின்றது. அதேபோலப் பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் மலரின் மனம்போல்