பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 எங்கும் நிறைந்துள்ளதே தவிர, மூலமாகிய மலர்போல் உள்ள அப்பொருளை எளிதில் அறிதல் இயலாத காரியம். மலரைத் தேடிக்காண்பது கடினமே ஆயினும், கண்டவழி மூக்கும், மலரும் ஒன்றாக் இணைந்து மணத்தை அனுபவிக்கின்றதை அறிவோம். அதேபோல எந்த ஒர் இடத்திலும் நிலைத்து நில்லாத இப்பரம்பொருளை, தேடிப்பிடித்து, இந்த உறுபொருளாகிய ஆன்மா பற்றிக் கொள்ளக் கூடுமேயானால் முழு அனுபவத்தைப் பெறமுடியும். 'அப்பொருள் பாராதே’ என்பது, அரிதின் முயன்று தேடிப்பிடிக்க வேண்டிய அந்த (ஓரிடத்து) நிலையிலாப் பொருளை, அடைய முற்படாமல் என்ற பொருளைத் தரும். 'பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திருக்கும் பித்தர் சொல் தெளியாமே என்பது முயன்று பெறவேண்டிய அப்பொருளை அடைய முற்படாமல்) வினை காரணமாக வந்த இப்பிறவியில் பெற்றதையே வைத்துக்கொண்டு, அது தரும் அற்பப் பயன்களையே அனுபவித்து மகிழும் இப்பிறவியே அற்புதமானது என்று சொல்லித்திரியும் பைத்தியக்காரர்களின் உரையை வெற்றுரை என்று தெளியாமல் என்ற பொருளைத் தரும். அந்த வெற்றுரையை நம்பிக்கொண்டு அவர்களுடன் திரிந்த என்னை அவர்களிடமிருந்து பிரித்து அத்தன் ஆண்டு கொண்டு) தன் அடியரில் கூட்டிய அதிசயத்தைக்' காணவாருங்கள் என்கிறார். நறுமலரிடத்து எழுகின்ற நாற்றம் பரந்தும் விரிந்தும் இருப்பினும், அதனை முகர்ந்து அனுபவிக்கலாமே தவிர, அது துண்பொருள் ஆதலின், பற்றிக்கொள்ள முடியாது. அதுபோல உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று