பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 73 நிலைகள் இருப்பினும், மனம் மொழி மெய்களால் பற்றிக் கொள்ளக் கூடிய உருவநிலை, அருவுருவநிலை, அருவநிலை என்ற குறிப்பிட்ட ஒரு நிலையும் இல்லாததாகிய பரம்பொருள் ஆக்கையின்கண் உள்ள உயிரினிடத்து உறு பொருளாக, வேண்டத்தக்க பொருளாக அமைந்துள்ளது. காண்பதற்கும் பற்றுவதற்கும் அகப்படாத பொருள் ஆதலால் உயிர்களினிடத்து மறைந்து நிற்கும் அப்பரம் பொருளைக் கவனத்தில் கொள்ளாமல், அதனை அறிய வேண்டிய முயற்சியையும் செய்யாமல், கிடைத்த இந்த உடம்பே மாபெரும் சிறப்புடையதென்று கருதிப் பொழு தைக் கழிக்கின்றவர்களுடன் சேர்ந்து நானும் அயர்ந்தேன். மேலே தந்துள்ள விளக்கத்தில் எனக்குப் பட்டவை எழுதப்பெற்றுள்ளனவே தவிர, இதனை முழு விளக்க மென்றோ, இதுதான் விளக்கமென்றோ சொல்லும் துணிவில்லை. 437. இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல்வினைச் சிறு குடில் இது இத்தைப் பொருள் எனக் களித்து அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை தெருளும் மும்மதில் நொடி வரை இடிதரச் சினப் பதத்தொடு செம் தி அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே 10 நொடி வரை-நொடி அளவில், நொடிப்பொழுதில் 'இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல்வினைச் சிறுகுடில்’ என்றதால் இவ்வுடம்பாகிய சிறுகுடில் வல்வினை என்று சொல்லப்படும் அத்திவாரத்தின்மேல் நிற்கின்றது. அடுத்து இருள் திணி சிறு குடில்’ என்றதால் தி.சி.சி.1V 6