பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அஞ்ஞானம், அதிலிருந்து தோன்றும் ஆணவம் ஆகிய இருள், இச்சிறு குடிலைப் பற்றி நிறைந்திருக்கின்றது என்கிறார். - - இந்த இருள் நிறைந்த சிறு குடிலை, மெய் என்ற பெயர் வைத்த காரணத்தால், உண்மையானது என்று நம்பி அதன்வழியே சென்று, கொடிய நரகிடை விழுவான் வேண்டிச் செல்கின்றேன். Y "தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர' என்றதால் விளங்குகின்ற திரிபுரங்களை ஒரு நொடிப் பொழுதில் எரியுண்ணுமாறு செய்த பெருமான் என்கிறார். இவ்வாறு எரியுண்ணச் செய்தவன், மெய்ந்நெறி காட்டும் மெய்ப்பொருள் ஆதலின், அவனையே மெய்ந்நெறி என்று உருவகித்தார். - உடலையே மெய்யென நம்பி நரகத்தில் விழுவதற்கு விரைவாகச் சென்ற என்னை ஒரு நொடியில் திரிபுரத்தை அழித்தவனாகிய பெருமான், என் மும்மலங்களையும் எரித்து, பொய் நெறியினின்றும் விலக்கி, செந்நெறியில் செலுத்திய அதிசயத்தைக் கண்டாமே என்றார். છે કે ૩