பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புணர்ச்சிப் பத்து அத்துவித இலக்கணம் புணர்ச்சிப் பத்து என்பது ஒருங்கு இணைந்து இருத்தல்பற்றிய பத்துப் பாடல்கள் என்ற பொருளைத் தரும். புறம் ஐம்பத்து எட்டாம் பாடலில் வரும் இன்றே போல்க நும் புணர்ச்சி என்பது சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களும் ஒருங்கிணைந்து இருந்ததைக் குறிப்பதாகும். குறளில் வரும் புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள்:785) என்ற தொடரிலுள்ள புணர்ச்சி’ என்ற சொல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனங்கள் ஒரே சிந்தனையுடன் ஒருங்கிணைந்து இருத்தலையே குறிக்கும். . . திருவாசகத்தில் வரும் “பொல்லா மணியைப் புணர்ந்தே" என்பது, துளையிடாத மணியாகிய இறைவனுடைய திருவடியை மனத்தில் இருத்தி, வேறு சிந்தனையில்லாமல், அதனோடு ஒருங்கு இணைந்து இருத்தல் என்ற பொருளைத் தரும். திருப்பெருந்துறையில் தொடங்கிய அடிகளாரின் ஆன்மீக வளர்ச்சியில் புணர்ச்சிப் பத்து ஒரு திருப்பு முனையாக நிற்கின்றது. ஆசைப்பத்து நீங்கலாகவுள்ள ஏனைய பகுதிகளில் அடியார் கூட்டம், திருவடிப் பெருமை, திருவடியைப் புறத்தே இருந்து வணங்குதல், அத்திருவடியைத் தம் நெஞ்சுள் பதித்தல் போன்றவை பேசப்பெற்றன. இந்த முறை வைப்பிற்குப் பெரிதும் மாறுபட்டு நிற்பது கையால் தொழுது (திருவாச. 425) என்று தொடங்கும் ஆசைப்