பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பத்தின் பாடலாகும். அந்தப் பாடலில்தான் திருவடிகளை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு அமைதியாக இருக்க ஆசைப்பட்டேன் என்று பாடுகிறார். இந்த இடத்தைத் தவிர மற்றப் பகுதிகள் திருவடியைப்பற்றி எவ்வளவு பேசினாலும் புணர்ச்சிப் பத்தில் பேசப்பெறும் நெருக்கம் அவற்றில் இடம்பெறவில்லை; திருவடியின்மாட்டு அச்சங் கலந்த பக்தியே அவற்றில் வெளிப்பட்டு நிற்கின்றது. இதற்கு அடுத்த நிலை அத்திருவடியை நெஞ்சாரத் தழுவிக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலை. இதுவரை, திருவடியினிடத்து இருந்த அச்சம் நீங்கி, ஒர் இணக்கம் தோன்றத் தொடங்குகிறது. இதிலும் முழுத்தன்மை இல்லை. காரணம், திருவடி தனித்து எங்கோ இருக்கிறது. அதன் அருகில் சென்று அதனைத் தழுவிக்கொண்டாலும் அத்திருவடி வேறாகவும், தழுவுகின்றவர் வேறாகவும் இருக்கின்ற இரட்டை நிலை தவிர்க்க முடியாததாகும். அச்சத்தோடு பக்தி செய்யும் நிலையை நோக்க, தழுவிக்கொள்ளும் நிலை உயர்ந்தது என்றாலும், பின்னே வரும் புணர்தல் நிலையை நோக்க, தழுவுதல் நிலையும் ஒரு படி கீழ்ப்பட்டதே ஆகும். திருவடிகளைத் தழுவ ஆசைப்பட்டேன் என்று பாடிய அடிகளார், புணர்ச்சிப் பத்தில் பல படிகள் மேலே சென்றுவிடுகிறார். பொல்லா மணியைப் புணர்ந்து என்பதால், ஒருங்கிணைகின்ற நிலை இங்கே பேசப் பெறுகிறது. - எவ்வளவு ஒருங்கிணைந்தாலும், இரண்டும் சமமான நிலையில் இருந்தாலும் அடிகளார் வேறு, திருவடி வேறு என்பதை மறுத்தற்கில்லை. புணர்ச்சிப் பத்தின் இரண்டாம் பாடலில், போற்றிப் புகழ்வது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப்