பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 77 புணர்ந்தே என்று வருவதால் பொல்லா மணியைப் புணர்ந்த நிலையிலும் புறத்தே நின்று போற்றி நிற்கும் நிலையும், புகழ்ந்து நிற்கும் நிலையும் பேசப்படுகின்றன. ஆதலின், இப்பகுதிக்கு அத்துவித இரண்டு இல்லை) இலக்கணம் என்று தலைப்புத் தந்தது சற்றும் பொருந்தாமையை அறிதல் வேண்டும். அத்துவிதம் என்றால், போற்றிப் புகழும் ஒருத்தரும், போற்றிப் புகழப்பெறும் ஒருத்தரும் இருத்தற்கில்லை. புணர்ச்சி என்ற சொல் இரண்டு பொருள்கள் ஒருங்கிணைதலைக் குறிக்குமாதலின் அத்துவிதம் என்ற பொருள் பொருந்தாமை அறிக. 438. சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து கடைப் பட்டேனை ஆண்டு கொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் தடைப் பட்டு இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ என் பொல்லா மனியைப் புணர்ந்தே t 'கடைப்பட்டவனாகிய என்னை, எவ்விதத் தகுதியும் பாராதுவாளா) என் அடிமைத்தன்மையை உகந்து ஏற்றுக்கொண்ட கருணைக்கு இருப்பிடமானவனை, ஒளிவிடும் பொற்குன்றை, துளையிடப்படாத முத்தை, தன்னை எனக்குத் தந்த அமுதுபோன்றவனைப் புணர்ந்து, அவன் அருகிலேயே நெருங்கி இருப்பது (புடைபட்டு) என்றோ?' என்றவாறு. 'திருமாலும் பிரமனும் இன்னும் சென்று அடைய முடியாத (சாரமாட்டாத்) தன்னை (அவனே விரும்பி) எனக்குத் தந்தான்.