பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - திருவாசகம் - சில சிந்தனைகள் سد 'புடைபட்டு இருப்பது என்றுகொல்லோ’ என்று கூறியமையால் நெருங்கிப் புணர்ந்து அருகிலிருப்பது என்ற பொருளையே தருகிறது. 439. ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்து ஐம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி ஒலம் இட்டுப் போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் . பொல்லா மணியைப் புணர்ந்தே 2 'அவனிதலமாகிய இப்பரந்த உலகின்கண், ஐம்புலன்கள் என்று சொல்லப்படும் சேற்றில் அழுந்தி, வெளியே வர ஆற்றலோ வழியோ இல்லாமல் அலமருகின்றேன். இனி இதனை நீண்ட காலம் பொறுத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் என்பால் இல்லை. தளர்ச்சி தரும் இதிலிருந்து நீங்கி, 'சிவனெம்பெருமான்’ என்று சொன்னவுடனேயே மணல் ஊற்றுப் போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலமிட்டு என் பொல்லா மணியைப் புணர்ந்து அவன் கருணைத் திறத்தைப் போற்றிப் புகழ்வது என்றோ என்றவாறு, 'ஊற்று மணல்போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி’ என்ற உவமை விளக்கமாக அறியப்பட வேண்டிய ஒன்றாகும். மணல் நிறைந்த இடத்தின் அடியில் ஊற்று மறைந்துநிற்கின்றது. மணலைத் தோண்டத் தோண்ட ஊற்று நீர் வெளிப்படுமாப்போலே, சித்தத்தின் ஆழத்தில் நிறைந்து மறைந்துநிற்கும் உருக்கம் சிவனெம் பெருமான் என்று சொல்லச் சொல்ல வெளிப்பட்டுக் கண்ணிராய்ப் பெருகும் என்றபடி,