பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 79 'போற்றிப் புகழ்வது என்பதற்குப் பதிலாகப் போற்றி நிற்பது' என்று பாடமும் உண்டு. 440. நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை அள்ளுறு உள்ளத்து அடியார் முன் வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி விரை ஆர் மலர் தூவிப் பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே - 3 'அக்கினித் துரணாக நின்றவன், ஒருசிறிதும் விருப்பமில்லாமல் வழியோடு சென்றுகொண்டிருந்த என்னை இழுத்துப் பிடித்து ஆண்டுகொண்டவன்; எனக்கு அமுது போன்றவன் ஆகிய எம் தலைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு, என்னை மறந்து கிடப்பது என்றாங்கொல்?’ என்றபடி, இவ்வாறு தம்மை மறந்து கிடக்க விரும்பும் ஒருவர் இதே நிலையிலுள்ள பிற அடியார்களுடன் சேர்ந்து இவ்வாறு இருக்கவேண்டும் @T@s விரும்புவது இயல்பேயாகும். அவர்களைப்போலவே மலர் பறித்துத் திருவடிகளில் துவவேண்டும் என்று அடிகளார் நினைப்பதும் இயல்பேயாகும். அதனையே இங்கு அடிகளார் ‘அள்ளுறு உள்ளத்து அடியார் முன், வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரையார் மலர்துவி' என்று பாடுகிறார். இக்கருத்தைப் பெளத்தர்களும் ஏற்றுக்கொண்டு போற்றினர் என்பதை, அவர்கள் கூறும் 'சங்கம் சரணம் கச்சாமி என்ற தொடர் வலியுறுத்துவதைக் காணலாம்.