பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 441. அல்லிக் கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் சொல்லிப் பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 4 'சொல்லிப் பரவும் நாமத்தானை' என்று கூறிவிட்டு அடுத்த படியாக சொல்லும் பொருளும் இறந்த சுடரை' என்று கூறுவது சற்று வியப்பானது. 'சொல்லும் பொருளும்’ என்பதற்கு ஒசை வடிவினதாகிய சொல்லும் அது குறிக்கும் பொருளும் என்று பொருள் கொண்டால், மனித முயற்சியில் தோன்றும் சொல்லும் அது குறிக்கும் பொருளும் என்ற விளக்கத்தைத் தரும். சொல் என்பது சக்தியின் வடிவம் என்றும் பொருள் என்பது சிவவடிவம் என்றும் காளிதாசன்முதல் பலரும் கூறியுள்ளனரே! அப்படியிருக்க, 'சொல்லும் பொருளும் இறந்த சுடர்' என்பது பொருந்துமா என்ற வினாத் தோன்றலாம். சொல் என்பது இறைவியின் வடிவம் என்றால், அந்த வடிவைக் கடந்து நிற்பவள் இறைவி. அதேபோலப் பொருள் சிவசொரூபம் என்றால், சொரூபம் கடந்தும் நிற்பவன் இறைவன். இருவருக்கும் இந்த இயல்பு உண்டு என்பதை மறத்தலாகாது. அதனாலேயே சொல்லும் பொருளும் இறந்த சுடரை என்றார். இவ்வாறன்றி இதற்கு வேறொரு பொருளும் கூறலாம். சொல் என்பது நாதத்தின் ஒரு நிலை, பொருள் என்பது பிந்துத் தத்துவத்தின் ஒரு நிலையாகும். எனவே, நாத பிந்துத் தத்துவங்களுக்கு அடங்காமல் அப்பாற்பட்டு நிற்கும்