பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. வாழாப் பத்து (முத்தி உபாயம்) இன்று திருவாசகம் பதிப்பிக்கப்பெற்றுள்ள முறையில், செத்திலாப் பத்தின் பின்னர் அடைக்கலப் பத்தும், ஆசைப்பத்தும், அதிசயப் பத்தும், புணர்ச்சிப் பத்தும் ஆகிய நான்கின் பின்னரே, வாழாப் பத்து இடம் பெறுகிறது. ஆக, இந்த ஆறு பத்துக்களையும் எடுத்துக்கொண்டு பார்த்தால் பொதுவான சில சிந்தனைகளைப் பெறலாம். "செத்திடப் பணியாய் என்று முதலில் வேண்டினார். அடுத்து அவனிடமிருந்து பணிஆணை வராதபொழுது, ‘ஐயனே! மறந்துவிட்டாயா! நான் உன் அடைக்கலம் என்பதை மறுபடியும் உந்தனுக்கு நினைவூட்டுகிறேன் என்று பேசுகிறார். அடுத்து, எவ்வளவுதான் தன்னிச்சை என்ற ஒன்றை இழந்து அடைக்கலமாக இருந்திருந்தாலும், இல அடிப்படையான விருப்பங்களை மனம் கொண்டிருக்கும். மனம் இருக்கின்றவரை இவை இருக்கத் தான் செய்யும். அடிகளார் போன்ற பெருமக்களுக்கு இந்த ஆசை, மிகச் சிறந்த ஆசையாயினும், விஸ்வரூபம் எடுக்காமல் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் அடங்கிக் கிடக்கிறது. அடைக்கலமாகச் சென்றுவிட்ட பிறகு, செத்திடப் பணியாய் என்று கேட்பதற்கும், ஆசைப்பட்டேன் தி.சி.சி.IV 7