பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கண்டாப் என்று தம் விருப்பத்தை அறிவித்தற்கும் என்ன உரிமை உள்ளது? அது இல்லை என்பதை அடிகளார் நன்கு அறிவார் ஆயினும், இன்னும் இந்த உடம்போடு வாழ்கின்ற காரணத்தால் மனத்திடைத் தோன்றிய ஆசைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறார். அப்படித் தோன்றிய ஆசைகள்கூட, இறைவனோடு உடனிருக்க வேண்டும் என்ற முறையில் தோன்றியதே தவிர, வேறு எந்த உலகப் பொருள்கள்மீதும் ஏற்படவில்லை. எனவேதான், மிக்க தைரியத்துடன் ‘ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே’ என்று பாடுகிறார். முன்னர்ப் பின்னர்க் கண்டிராத, அனுபவியாத ஒரு பொருளின்மேல் ஆசை ஏற்படுவது கடினம். ஆனால், ஆசைப்பட்டேன் கண்டாய்” என்று அடிகளார் கூறுவதற்குக் காரணம் அடியார்களோடு ஒரு சிறிதுநேரம் உடனிருக்கும் வாய்ப்பைப் பெற்றமையா லாகும். அதனையே அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே” என்று வியக்கின்றார். கூட்டிய அதிசயம் என்றதால், இது முன்னரே நடைபெற்றது என்பது பெற்றாம். முன்னர்க் கிடைத்த அனுபவம் ஆதலாலும், அந்த அனுபவத்தைப் பெறுவதற்குத் தடையாகவுள்ளது இந்தப் பூதவுடம்பே என்ற உறுதிப்பாடு அவர் மனத்தில் ஆழமாகப் பதிந்ததாலும், ஒரு பெரும் மனக்கலக்கத்திற்கு அடிகளார் உள்ளாகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஆறு பத்துக்களையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்தால் அடிகளார். ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டுத் தேடுகின்றார் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. செத்திடப் பணியாய்', 'அடியேன் உன்