பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134_திருவாசகம்-சில சிந்தனைகள்-5 பாவனை என்பது மனம், ஆழ்மனம் என்ற இரண்டையும் கடந்து, சித்தத்தில் ஒன்றிநிலைபெறும் நிலையாகும். பயனில்லாத ஒன்று சித்தம்வரை செல்வதில்லை; சென்றாலும் பயன்விளைப்பதில்லை. இதனையே, அடிகளார் பாவனையாய கருத்து’ என்று பேசுகிறார். சித்தத்தில் நிலைபேறாகவுள்ள ஒன்றைப் பாவனை என்று கூறுவதுண்டு. பாவனையாய கருத்து என்று அடிகளார் கூறும்போது சித்தத்தில் நிலைபேறாக நிலைத்துவிட்ட ஒரு கருத்து என்ற பொருளிலேயே இதனைக் கூறுகிறார். மேல் மனம், அடி மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்தையும் தொழிற்படாமல் இருக்கச்செய்து, சித்தத்தில் நிரம்பியிருக்கும் ஒன்றைப் பாவனை என்று கூறுவர். இதனைச் சமாதிநிலை என்று கூறுபவர்களும் உண்டு. இந்தச் சமாதிநிலையில் எல்லையற்ற ஆனந்தம் நிறைந்திருக்கும். ஆதலால், இது 'பராஅமுது ஆகும் என்கிறார் அடிகளார். கண்டம் என்ற சொல் துண்டிக்கப்பட்டது அல்லது பிளவுபட்டது என்ற பொருளைத் தரும். அகண்டம் என்பது பூரணப்பொருள் எனப்படும். பூரணத்திற்கு அழிவில்லை; ஆதலால், அந்தமிலாத அகண்டம்’ என்றார். அத்தகைய ஒன்று, எல்லை கடந்துநிற்கும் ஒன்று, அகண்டமாய் நிற்கும் ஒன்று, அழிவில்லாத ஒன்று எல்லையுடையதும் அழியக்கூடியதும் பிளவுபட்டு நிற்பதும் ஆகிய நம் உடம்பினுள் உறையும் உள்ளத்தில் தோன்றி ஒளிவிடுவது வியப்பேயாகும். . ஆதியாகவும், முதன்மையானதாகவும் உள்ள அந்தப் பரஞ்சுடர் நம்மை நெருங்கி வருவது ஒர் அதிசயம். மகளிரால் வரும் இடர் நம்மை வந்து அணுகாது. மேலும் இதுவரை இடர் செய்துவந்த சேல்போன்ற