பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படைஆட்சி-135 கண்ணினை உடைய மடவார்கூட இப்பொழுது அந்தக் கண்களை அவன் திருமேனியின் அழகைக் கண்டு உய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். தோன்றித் தோன்றி மறைவதும் பல இடர்களைச் செய்வதுமாகிய துயரம் நிறைந்த பிறவி நம்மை விட்டு நீங்கிவிடும். இப்பாடலிலும் ஆகாதே’ என்பது ஆகும் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பெற்றுள்ளது. 638. என் அணி ஆர் முலை ஆகம் அனளந்து உடன் இன்புறும் ஆகாதே எல்லை இல் மாக் கருணைக்கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆதாதே நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே என்னை உடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே 4 எந்த அடிப்படையில் நின்று பார்த்தாலும் இப்பாடலின் பொருள் தெளிவாக எனக்கு விளங்குமாறில்லை. முழுவதையும் தெளிவுபடுத்த இயலாதெனினும் ஒருசில தொடர்களின் பொருளைக் கீழே தந்துள்ளேன். - பக்தி இயக்கத்தில் இறைவன் ஒருவனே ஆண் என்றும் உயிர்கள் அனைத்தும் பெண் என்றும் கொள்ளுதல் மரபு.