பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவாசகம் சில சிந்தனைகள்-5 572. பொருந்தும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே 4 இப்பாடலின் முதலிரண்டு அடிகள் அமைச்சராக இருந்த காலத்தையே நினைவுகூர்வதாகும். பெரும்பதவி வகிக்கின்ற காலத்தில் பிறப்பு இறப்புப் பற்றிய நினைவு யாருக்கும் வருவதில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் இது நிலையற்றது என்று நினைப்பதேயில்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிமாறி வரும் அதிகாரத்தை அனுபவிப்பவர்கள்கூட இது நானூறு ஆண்டுகளுக்குத் தம்முடையது என்று நினைக்கின்றார்களே தவிர, நான்கு என்பதுகூட நிலையில்லாதது என்று. நினைப்பதே இல்லை. இத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் பதவிக்கு வந்துவிட்டால் சாகின்றவரையில் அப்பதவியில் இருக்கக் கூடிய அந்தநாள்பற்றிய பாடலாகும் இது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பிறப்பு இறப்பினால் வரும் துன்பங்களைப் பற்றி நினைப்பதேயில்லை. மேலும், பகல் முழுவதும் பெரும் பொறுப்பில் கடமையை நிறைவேற்றுபவர்கள் அதிலிருந்து மாறியவுடன் இன்ப வேட்டையில் பொழுதைக் கழிக்க முற்படுகின்றனர். பதவி காரணமாக மனத்தில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கிக்கொள்ளத் தையலார் மையல் பெரிதும் உதவிற்று. இந்நிலை அன்றும் இன்றும் பொதுவானதேயாகும். இப்படியே வாழ்நாள் முழுவதையும் வினே கழித்திருக்கக் கூடிய தம்மைக் குருநாதர்