பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடகஅ திருவாசக ஒளி நெறி 7. திருவெம்பாவை 1-8 பாடல்கள் சிவனிடத்தில் ஈடுபட்ட தோழியர்கள் உறங்கு கின்ற தோழியை எழுப்புவதைக் கூறுகின்றன. - 9, 19 பாடல்கள் எல்லாப் பெண்களும் சிவபிரானுக்கும் அவருடைய அடியார்க்குமே தாங்கள் ஈடுபடுவோம் என்னும் விஷயத்தைக் கூறுகின்றன. 10, 11, 12, 13, 14, 17, 18, 20 எண்ணுள்ள இப் பாடல் கள் அப் பெண்கள் பெருமானுடைய புகழைப் பாடித் தாமரைப் பொய்கையில் மார்கழி மாதத்தில் ரோடுவதைக் குறிக்கின்றன. 16. இப்பாடல் மழைக்கும் தேவிக்கும் உவமை கூறி இறைவன் திருவருள் போல் மழை பொழிக எனக் கூறுகின்றது. 20. இப்பாடல் இறைவனேப் போற்றி அவர் திருவடியிற் கூட வேண்டுமென விரும்புவதைக் குறிக்கின்றது. பின்னும், 10 ஆம் பாடல் - பெண்கள் கோயிலிற் பணி செய்யும் பெண்களே விளித்துப் பெருானுடைய ஊர் ஏது, பேர் ஏது, ஆர் உற்ருர், ஆர் அயலார், ஏது அவசீனப் பாடும் பரிசு என்பன வினவுதல். 11 ஆம் பாடல்-தங்களைக் காப்பாய் எனப் பெண்கள் இறைவனே வேண்டுதல். 18 ஆம் பாடல் ரோடும் மடுவு பிரானேயும், பிராட்டியையும் எவ்வாறு ஒத்து இருக்கிறது என்பதை விளக்குகின்றது. 15 ஆம் பாடல் இறைவனேத் தவிர வேறு ஒருவரையும் பணியாது அவனிடத்தில் பித்துக் கொண்டு உள்ளாள் இவள் ஒருத்தி எனவும். யார் ஒருவர் இவ் வண்ணம் அவளே ஆட்கொள்ளும் வித்தகம் உடையார் என்றும் ஏனேய பெண்கள் கூறுகின்றது. 17, 18 ஆவது பாடல்கள் கன்னி ஒருத்தியை கோக்கிப் பிற பெண்கள் கூறுமாறு அமைந்துள்ளன.