பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

му П. Лт திருவாசக ஒளி நெறி 8. அவியை வாங்கின. அக்கினியின் கை தறிக்கப் பட்டது என்பதும், 4. பார்வதியின் மீது பகை கொண்ட தக்கன் பார்க்கத் தக்கவன் அல்லன் என்பதும், 5. இந்திரன் குயில் உருவம் எடுத்து ஒரு மரத்தின் மீது ஏறிஞன் என்பதும், 6. யாகத்தை நடத்திய வியாத்திரன் தலே அறுபட்டது என்பதும், 7. தக்கனுக்கு ஆட்டுத்தலே பொருத்தப்பட்டது என்பதும், 8. உண்ண வந்த 'பகன்' என்னும் சூரியன் ஒளித்து ஓட முடியாதபடி அவன்கண் பறிக்கப்பட்டது என்பதும், 9. காமகளுடைய மூக்கும், பிரமனுடைய தலையும் அறுபட்டன என்பதும், சந்திரனுடைய முகம் கெரிபட்டது என்பதும், 10. பிரமனும், யாகத்து எசமானனும் அழிபடவே இந்திரன் ஒடிப்போம் வழியைத் தேடினன் என்பதும், 11. சூரியனுடைய பற்கள் நெரிக்கப்பட்டன என்பதும், 12. தக்கன் தலே இழந் தான் என்பதும். 19. ஆன சிகழ்ச்சிகள் கூறப்பட்டுள. பதினேழாவது பாடலில் உபமன்யு முனிவர் குழங்தைப் பருவத்தில் பால் வேண்டி அழுதபோது பெருமான் பாற் கடலயே வரவழைத்துத் தங்தனர் என்பதும், பதினெட்டாம் பாடலில் பிரமன் தலை அறுபட்டது என்பதும், பத்தொன்பதாம் பாடலில் கயிலே மலையை எடுக்க முயன்ற இராவணனுடைய தலைபத்தும் கசுக்குண்டன என்பதும்: இருபதாம் பாடலில் ஆகாயத்தில் காவல் கொள்ளும் (மேலாடை போர்த்துள்ள) * முனிவர்களே இறைவன் காக்கின்றனர் என்பதும் கூறப்பட்டுள. ஒன்று முதல் நான் கு (1 -4) பாடல்களுள் பெருமான் 'ஏகம்பர், 'இள முலை பங்கன்' எனவும், ஐந்து முதல் பதினறு (5-16) பாடல்களுள் பெருமான் உருத்திரகாதன்,' 'பனைமுலை பாகன்' எனவும் குறிக்கப்பட்டுள்ளார்.

  • இவர்கள் 'வேளுவியோர்' எனப்படுவது திருமுருகாற்றுப் படையில் “விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏக்திய தொருகை' என்பதின் (கச்சினர்க்கினியர்)உரையைக் காண்க. புறம்-48 உரையும் பார்க்க.