பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV—211. வரலாறுகள் டுசுக உருவங் கொண்டு அப்பன்றியைப் பின் தொடர்ந்து அம்பு எய்திய வரலாறு பாரதத்தில் அருச்சுனன் தவகிலேச் சருக்கத்திற் காண லாகும். (16) "மங்கை மார்கையில் வளையுங் கொண்டு'--42-3 இது "வளையல் விற்ற திருவிளையாடலே' கினேப்பிக்கும் இருவிளையாடல் என்னும் தலைப்பு பக்கம் சசசு பார்க்க (17) இடவை மடநல்லாட்குச், சில மிகக் கருணையளிக்குந் திறம்" —43-2 இடவை - இஃது இடைவாய் என்னும் தலம் என்ப. இதனைத் இருவிடைவாய் எனச் சம்பந்தரது கல்வெட்டுப் பதிகத்தில் காணப் பட்ட தலம் என்ப. இத்தலம் பாண்டவ நதிக்கு அருகில் உள்ளது. கொரடாச்சேரி ஸ்டேஷனில் இறங்கி கூத்தா கல்லூ ருக்குப் போகும். வழியாகப் போக வேண்டும் - திருவிடைவாசல் என வழங்குகிறது. பதினேராம் திருமுறை சேஷத்திரத் திருவெண்பாவில் இத்தலம் 'பாண்டவாய் தென்னிடை வாய்' எனக் கூறப்பட்டுள்ளது. "அப்பர் தேவாரத்தில்' இடைமருது ; ஈங்கோய், இன்னம்பர், ஏர், இடவை, எமப்பேறுார் (6-70-8) என வருவதால், இடவை வேறு, இடை மருதார் வேறு என்பது பெறப்படும். ஆதலால் இடவை என்பது இடை மருதுார் அன்று என்பது விளங்கும். இடவைத் தலத்துப் புராணத்தால் மணிவாசகர் குறித்துள்ள "மடகல்லாட்கு சீலம் அளித்த வரலாறு' ஒருவேளை விளங்கும் போலும். (18) "மணிவ8ல கொண்டு வான் மீன் விசிறும்'-43-3 இது 'வலைவீசின. திருவிளையாடலேக் குறிக்கும் திருவிளையாடல் என்னும் தலைப்பு பக்கம் சச.அ பார்க்க. (19) "வேடுருவாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்து தன்னைத் தேட இருந்த சிவபெருமான்'-43-4 'அருமறைப் பொருளே எங்கும்ருய் என்று தேடிய வானேர்' சுங்தார் 7-69-2 . இங்கு குறித்த வரலாறு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. 43-5, 'ஆதி அந்நாள்...இலங்கை அதனிற் பந்தணை மெல் விரலாட் கருளும் பரிசு’ இவ் வுரலாற்றை 7-19; 18-2ல் பார்க்க