பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் - அன் திருவாசக ஒளிநெறி I 8. திருவுந்தியாரில் தலைவி தோழியுடன் இறைவனுடைய வீரத்தை யும் புகழையும் பாடி உங்தி பற’ என்னுங் காட்சி. 9. திருத்தோனுேக்கத்தில் தலைவி தோழியருடன் இறைவன் புகழைப் பாடித் தோளுேக்கம் என்னும் ஆடலே ஆடுங் காட்சி. - 10. திருப்பொன்னூசல் தலைவி தோழியரை விளித்து நாம் இறைவன் வீற்றிருக்கும் தலத்தையும், மாளிகையையும், அவன் எழிலேயும், குணத்தையும், அவன் அணியும் குண்டலங்களையும் வாயாரப் பாடி ஊ(ஞ்)சல் ஆடுவோம் என்னுங் காட்சி. 11. அன்னப்பத்தில்- இறைவரை கினேந்து உருகி, அவர் ஆடலேயும், எழிலேயும், கோலத்தையும் தலைவி தன்னிடம் எடுத்துக் கூறிய வகையை அவள் தாய் நமக்கு விளக்கும் காட்சி. 12. குயில் பத்து - தலைவி இறைவர் பெருமையைக் கூறி அவர் தன்னிடம் வரும்படி கூவுக என்று குயிலே விளித்துக் கூறுங் காட்சி. 18. திருத்தசாங்கம் - தலைவி கிளியை விளித்து இறைவனுடைய திருகாமம், நாடு முதலிய தசாங்கங்கள் எவை எனக் கேட்டு விடை அளிக்குங் காட்சி. 14. திருப்பள்ளியெழுச்சி - இறைவர் புகழைப்பாடி அவரைப் பள்ளி எழுப்புங் காட்சி. 15. திருப்படையெழுச்சியில் தொண்டர்களையும், பக்தர்களையும், யோகிகளையும், சித்தர்களையும் கூவி அழைத்துத், திருநீற்றுக் கவசம் அணிந்து மாயப் படையும், அல்லற் படையும் நம்மைத் தாக்காதவாறு செய்யும் போரில் நீங்கள் எவ்வாறு எங்கெங்கு கிற்க வேண்டும் என்று மணிவாசகர் அணிவகுக்குங் காட்சி. ஏனேய பதிகங்களில் - மணிவாசகர் தமது எண்ணங்களையும் அனுபவங்களேயும், இறைவனிடம் தாம் கேட்கும் வேண்டுகோள் களையும் அவரிடம் தாம் செய்யும் முறையீடுகளையும் எடுத்து விளக்கும் காட்சிகள் ஒருபால்; l 'இறைவனே! உன் திருத்தாளைப் பூண்டேன், இனி நானும் புறம் போகேன், உன்னேயும் புறம் போக லொட்டேன்', "நான் உன்னேச் சிக்கெனப் பிடித்தேன். இனி நீ எங்கெழுந்தருளுவது' எனத் தமது உறுதி கிலேயைக் கூறி.இறைவனுடன் வாதாடும் காட்சி ஒருபால்;