பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

நால்வகைப் பாக்களும், தரவு, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்க ளும் ஆகிவரும் அகம், புறம் எனப் பொருள் இலக்கணம் இரு வகைப்ப டும் நூலுடன் பயின்று உத்தி, வண்ணம் அணிசான்ற பல கலைகளும் தெரிந்த துண்ணியர் புகழும் தமிழ் வழங்கும் புதுவையாய்! கைகளைக் கொட்டி அருள் சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும் கோதையே! ஆண்டாளே சப்பாணி கொட்டி அருள்!

நேயத் துடன்பொன் கொழித்துஎறி திரைப்பொன்னி

நிலைபெறும் அரங்கத்து வாழ்

நிமலன்முதல் ஐவருக்கு ஒருதரம், மகிழ்த்தொடையால்

நீள் மார்பினர்க்குஒரு தரம்,

காயத் திரிக்குஒரு தரம்முண் டகத்தில்எண்

கண்ணன் தனக்குஒரு தரம்,

கற்றவர் புகழ்ந்தருள் பராசரர் வியாதர்உள்

களிகொள்வ தற்குஒரு தரம்,

ஆயத் துடன்பரவு கோபால மங்கையர்கள்

அனைவருக் கும்ஒரு தரம்,

அன்பினொடு பல்லாண்டு உரைத்தநின் தாதையுடன்

அழகுறப் பெற்றதுள பத்

தாயருக்கு ஒருதரம், எமக்குஒரு தரம்நிறுை

சப்பாணி கொட்டிஅரு ளே!

சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும்கோதை!

சப்பாணி கொட்டிஅரு ளே! (53)

திருமால் தன்னிடைப் பள்ளி கொண்டமையால் மிக்க அன்புடன் பொன்னைக் கொழித்து வீசும். அலைகளையுடைய காவிரி ஆறு நிலை பெறுகின்ற அரங்கத்து வாழ்கின்ற அரங்கன் முதலிய ஐவருக்கு ஒரு முறை யும், மகிழம் பூ மாலை அணிந்த நீள் மார்பினருக்கு ஒரு முறையும், காய த்திரி மந்திரத்தின் அதிதேவதைக்கு ஒரு முறையும், தாமரை மலரில் வீற் ாறுள்ள எண் கண்ணன் ஆகிய நான்முகனுக்கு ஒரு முறையும், கற்றவர் புக ழ்ந்தருள்கின்ற பராசரர், வியாசர் ஆகியோர் மனம் மகிழ்வதற்கு ஒரு முறையும், -