பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் x 10

இந்த இழிநிலை கண்ட அருளாளர்கள்,

வம்மின் புலவிர்! நும் மெய்வருத்திக் கை செய்து உய்ம்மினோ இம்மண் ணுலகினில் செல்வர் இப் போது இல்லை நோக்கினோம் என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவிர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?

மாரி அனைய கைமால் வரை ஒக்கும் திண்தோள் என்று பாரில் ஒர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே யான்கிலேன்" என்று நம்மாழ்வாரும்

"தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதீர் புலவீர்"

என்று சைவச் சான்றோரும் அறிவுறுத்த நேர்ந்தது.

தனிப்பாடல் பாடப் புலவரைத் தூண்டிய வறுமை, அவர்களுக்கே தாணத்தையூட்டிச் சிற்றிலக்கியங்கள் பாடத் தூண்டியது.

சிற்றிலக்கியங்கள் (சிறு பிரபந்தங்கள்) ஆயிரக்கணக்கில் குவிந்தன. புலவர்களுக்கும் புலைமைப் பசி அப்போதைக்கப்போது தணிந்தது.

அதுமட்டுமல்ல, படைப்புக் காலந் தொட்டே பண்பட்டு வந்த பைந்தமிழ்ச் சுவையறிவார் இல்லாது போகும் நிலையை, அச் சிற்றிலக்கியங்கள் மாற்றின.

பசி பொறுத்துக் கொண்டு பேரிலக்கியங்களை நீளப் படிக்க இயலாத உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பெரும்பான்மைத் தமிழ் ஆர்வலர்க்கு அக் காப்பியங்களிலுள்ள சுவையை முழுமையாக இல்லாவிடினும் ஒரளவாவது சுவைக்கும் பயனைச் சிற்றிலக்கியங்கள் நல்கின. ஒருவேளைக் கஞ்சிக்கும் மறுவேளைக் கஞ்சிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே, ஒரு சிறு நூலைப் படித்து முடித்துச் சுவைத்து மகிழ முடிந்தது.

அடிமைப் பட்டிருந்த அவலக் காலத்தில் உரைநடை நூல் உருவாகவில்லை. உரைதடை நூல் செய்ய இயலும் என்று எண்ணிப் பார்ப்பாரும் இல்லை. அவ்வாறு இருப்பினும் அவற்றில் செய்யுளில்