பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 * பொழிப்புரை - த.கோவேந்தன்

சொன்னவள் நீதான்் என்று தெளிவாக முற்ற உணர்த்தும் ஆழ்வார், ஆச் சாரியர்களின் பெருவாழ்வே! சின்னஞ்சிறு வீடு கட்டி விளையாடு! வயல்கள் சூழ்ந்த புதுவைப் பதியில் வாழும் உயர்ந்தவளே சிறிய வீடு கட்டி விளையாடு! .

பற்றுஉளம் அற்றவர் மற்றுஇரு வற்றுள

பற்றரை அற்பமுமே

பற்றிலன், அற்றவர் உத்தமர் அர்து ஒரு

பற்றுளம் உற்றவனாம்

முற்குணம் உற்றவன் முற்குண நித்தரும்

முத்தரும் விட்டுஅகனா

முத்திஅ ரிப்பவன் முத்திற முக்கன்ை

முக்கன னைப்பெறுவான்

அற்புதன் நன்தவ ரில்பெற தற்குஅரி

தப்பதி நற்குருவால்

அற்பின் நத்தவம் அற்றிடும் அற்பருள்

அற்பன்என் உச்சியின் மேல்

சிற்றடி வைத்துஅடி மைக்கொளும் வித்தகி:

சிற்றில் இழைத்தருளே! செயப்புது வைப்பதி யுள்பயில் உத்தமி

சிற்றில் இழைத்தருளே! {89}

வீடு பேறு தரும் இறைவனிடம் உள்ளத்தில் பற்றினை இல்லாத வரையும் வீடுபேறு அல்லாத கைவல்யம், ஐசுவரியம் ஆகிய இரண்டிலும் உண்டான பற்றுடைய வரையும் சிறிதும் பற்ற மாட்டான். புறம்பேயுள்ள ஆசை அற்றவரிடமும் தன் அடியாராகியஅன்பர்களிட மும் அவர்களுக்கென்றே அறுதி செய்த அன்பினை உள்ளத்தில் கொண் டவன். முக்குனங்களில் முதற்குணமாகிய ஒளிர்சத்துவ குணம் பொருத் தியவன். ஒளிர் குணத்தினர் ஆகிய நித்தர் முத்தர்விட்டு நீங்காத வீடு அளிப்பவன்.

மூன்று இயல்புகளையுடைய மாற்பேறு நித்யவிபூதி ஆடற்பேறு (லீலாவிபூதி) பொன்னுலகம் (சொர்க்கம்) என்ற மூன்று இடங்களையுடையவன். முக்கண்ணன் ஆகிய சிவபெருமானைத்தன்னில் ஒரு பாதியாகப் பெற்றவன். அருஞ் செயலினன்.