பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 150

சிறகையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளையுடைய புது வைப்பிராட்டியே! மேலே காட்டிய பொருள்களைக் கொண்டு சிறு சோறு சமைத்து விளையாடுக தென் அரங்கேசன் முதல் ஐவரும் விருந்து உண்பதற்குச் சிறுசோறு சமைத்து ஆண்டாளே! அருள்க!

மருமலர்த் தண்ணந் துழாய்பெற்ற தாயாக

மறையவர் பிரான்தந்தை யாய் மதில்அரங் கத்துள் துயின்றபுரு டோத்தமன்

வாய்ந்தநற் காந்தனா கிக்

குருபரம் பரைமுறையின் உபயவேதாந்தக்

கொழுந்துபடர் கொழுகொம்ப தாய்க்

கோலா கலப்புலமை பெருகுசி பாடியக் கொண்டல்ஒரு தம்முனா கச்

சுருதிமிரு தியைமுற்ற உணர்பத்தர் மைந்தராய்ச்

சொற்றவாய் அமுதம்ஊ றச்

சொல்லும் திருப்பாவை முப்பதுஈர் எழுபதாய்ச்

சொன்னதிரு மொழி.இரண் டும்

திருமுலைப் பால் என இழைத்தசொல் புதுவையாய்!

சிறுசோறு இழைத்தருள்க வே! தேவர்ஆ ரமுதுஉண்ண உளமகிழ்ந்து அருள்கோதை!

சிறுசோறு இழைத்தருள்க வே! (93)

மணமலராகிய குளிர்ந்த துழாய் பெற்ற தாயானாள் பட்டர் பிரான் பெரியாழ்வார் பெற்ற தந்தையானார். மதில் வளைந்த அரங்கத் துள் துயின்ற பெருமாள்-ஆண்டகை (புருடோத்தமன் பொருத்தமான நல்ல கணவன் ஆனான்.

குரு பரம்பரை வரிசையிலே வடமொழி, தமிழ் உபநிடதங்களின் கொழுந்து (அறிவு படர்கின்ற கொழுகொம்பாகி முழுமையான புலமை பெருகுகின்ற சீபாடியம் என்னும் அறிவுமழை, பெய்த மேகமாகிய இரா மாதுசர் ஒப்பற்ற தமையன் ஆனான். வேதங்களையும் அற நூல்களையும் முழுமையாக உணர்ந்த அடியார்கள் உனக்கு மைந்தர் ஆயினர்.

சொன்ன வாய் அமுதம் ஊறும் படி நீ சொல்லிய ரு வரிய திருப்பாவை முப்பது பாசுரங்களும், ஒரு நூற்று நாற்பத்து (மூன்றும்

என்று நீ சொன்ன திருமொழியும் ஆகிய இரு நூல் (பிரபந்தங்களும் அந்த மைந்தர் உண்ணும் பால் என்னும்படி செய்த புதுவை மணாட்டியே!