பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157女 பொழிப்புரை - த .கோவேந்தன்

பாலாழி யைக்கடைந்து அமுதம் புரந்தருள்

பராயரை எனத்தெளிந் தே

பழையவா னவர்.இந்த்ர நீலத்தின் அருமணிப்

பைம்பொன் தகட்டுஅழுத் திக்

கோலாக லம்பெறக் கற்பகா டவியைக் கொழும்பொலங் கொடிதுடக் கிக்

குவலயத் தினில்அளித் தனர்என்னும் வாய்மையைக்

கொள்கையால் அன்புற்று நீ

சாலோக சாமீப சாரூபம் எய்திஇறை

தன்னொடுஒன்று என்னும்நட் பில்

சகலகலை தெரிநிபுனர் பரவிய அரங்கரொடு

தலைவர்ஜ வரும்கிழ வே

பூலோக புவலோக தவலோகம் இன்புறப்

பொன்னூசல் ஆடியரு ளே!

புதுவை அந் தணர்பிரான் அருளும்அழ கியபுதல்வி

பொன்னூசல் ஆடியரு ளே! (100)

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அளித்தருளும் ஆரணங்கு (பராபரை) ஆண்டாளாகிய நீயே எனத் தெளிந்து, பழைய வானவர்கள், இந்திர நீலத்தின் அருமணியைப் பசும்பொன்னின் தகட்டிலே பதித்துச் சிறப்புப் பெறும்படி கற்பக வனத்தில் கொழுவிய பொற்கொடியாகிய காமவல்லிக் கொடியைக் கட்டி, இந்த ஊசலை நிலத்துக்குக் கொண்டு வந்து அளித்தனர் என்னும் கொள்கையால் அன்புற்றுப் பொன்னுரசல் ஆடி அருளாய்!

திரு மாலின் பொன்னுலக(பரம பத)த்தில் அவனுக்கு அங்கிருந்து அவன் வடிவமே பெற்றமையால் இறைவன் ஆகிய அவனொடு சமம் என்னும் நட்பால் ஆய கலைகளையும் தெரிந்த அறிஞ(வித்தகர் வழிபட்ட அரங்கனுடன் தலைவர் ஐவரும் மகிழுமாறு பொன்னுரசல் ஆடி அருளாய் இந் நிலவுலகமும் தவ உலகமும் முதலிய உலகங்கள் அனைத்தும் இன்புறுமாறு பொன்னுரசல் ஆடி அருளாய்! புதுவை அந்தணர் பெரியாழ்வார் பெற்ற பெண் கொடியே அழகிய புதல் வியே! ஆண்டாளே! பொன்னுரசல் ஆடி அருளாய்