பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 ல் பொழிப்புரை - த.கோவேந்தன்

சந்ததம் சதுமறைப் பனுவலை உரைக்கும்நல்

தாதைதலை கொய்தபழி யால்

தலையினில் கைவைத்து இரந்தவன் இரப்பைத்

தவிர்த்தவன் சாபம்நீக் கும்

சுந்தரத் தோள்.அழகர் அமுதம்நீ என்பது துணிந்துஅந்த மழுவாளி யார்

தோழனாம் வடதிசைத் தலைவன்வர விட்டது ஒரு

சுடர்மணித் திருஉளசல் காண்!

மந்தரா சலம்உழல மதிதழவ அரவுஅழல

மகரான யம்கடைந் தே

வந்ததெள் அமுதுஅமரர் தமதுஉயிர்க்கு உறுதி.இது

மன்னுயிர்க்கு உறுதி.என் றே

புந்தியில் கொண்டுஇங்கு உதித்ததெள் அமுதமே!

பொன்னூசல் ஆடியரு ளே!

புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!

பொன்னுரசல் ஆடியரு ளே! (102)

எப்போதும் நான்மறைத் தொடர் சுலோகங்களை ஒதிக் கொண் டேயிருக்கும் தன் தந்தையாகிய நான்முகன் தலையைச் சிவன் அறுத்து விட்டான். அந்தக் கொடிய பழிச் செயலால், அந்த நான்முகனது மண் டையோட்டைக் கையில் கொண்டு இரந்த சிவனது பிச்சை ஏற்பைத் தீர்த்து அந்தத் தலையை அறுத்தமையால் வந்த சாவிப்பையும் நீக்கினான் மல்லாண்ட மணித் தோள் அழகன்.

அந்த அழகன் விரும்பும் அமுதம் நீ என்பது உறுதியாக அறிந் தான்், அந்த மழுவாளியாகிய சிவனுக்குத் தோழன் அளகேசன் (குபேரன்), அவன் எட்டுத் திசைக் காவலர்களில் வடதிசைக் காவலன், தன் நண்பன் பழியைத் தீர்த்த நன்றியை நினைத்து அந்த அளகேசன் அனுப்பிய ஒப்பற்ற ஒளிமணிகள் பதித்த அழகிய ஊசல் இதுதான்்!

மந்தரமலை உழலவும் நிலவோன் வெம்பவும் வாசகிப் பாம்பானது வெப்பம் கொள்ளவும் மகராலயம் ஆகிய பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வந்த தெள் அமுது தேவர்கள் தம் உயிர்க்கு மட்டுமே உறுதியானது உயிர்க்குலம் அனைத்துக்கும் உறுதி தருவதாகிய அமு தம் தரவேண்டும் என்று மனத்திலே எண்ணித் திருப்பாவை அமுதம் தருவ தற்காகப் புதுவையில் வந்த தெள்ளிய அமுதமே!பொன்னுரசல் ஆடி அருளாய்!