பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 166

உன்னைத் தேடிப் புறப்பட்டு விடாதபடி காவல் உள்ளனர். எத்தனை காவல் இருப்பினும் தேவர் அமுதமும் திருவும் அடைவதற்கு யார்தாம் உலகத்தில் எதிர் கொள்ள மாட்டார்கள்?

கற்றவர் புகழும் புதுவை அந்தணர் பெரியாழ்வார் மகளே! ஆண்டாளே காம நோன்பு அது தவிர்க! காரியார் பெற்ற நம்மாழ்வார் மகள் ஆகிய கோதையே காம நோன்பு அது தவிர்க! சொற்றமிழ் :

ஆண்டாள் அரங்கன் முதல் ஐவரை மணந்து கொள்வதற்காகக் காடனையும் அவன் தம்பி சாமனையும் நோக்கி விரதம் இருந்தாள்.

அவள் காம நோன்பு மேற் கொண்ட செய்தி நாச்சியார் திருமொழி முதல் திருமொழியாகிய தையொரு திங்களும் என்ற பதிகமாக அவளே கூறியுள்ளாள்.

அனங்கதேவா! உன்னையும் உம்பியையும் தொழுதோம் என்ற இடத்துக் காமன் தம்பியையும் தன் விருப்பம் நிறை வேறுவதற்காகத் தொழுதாள் என்று உணர்கின்றோம். வேங்கடவற் கென்னை விதிக்கிற்றியே! என்பது ஆண்டாள் காமனிடம் வேண்டிக் கொண்ட பாசுரப்பகுதி.

இந்தப் பதிகம் கண்ட பிள்ளைத் தமிழ்க்கவிஞர் தம் கற்பனை வளத்தால் காம நோன்புப் பருவம் எனப் புதுவதாக ஒரு பருவம் படைத்துக் கொண்டு, தம் பத்தியையும் புலமையையும் வெளிப்படுத்தி யுள்ளார். இப் பருவம் வேறுயாரும் பாடாதது.

திருமால் இடப கிரி, சேடகிரி, திருவரங்கம் ஆகிய ஊர்களில் அழகன் ஆகவும், அப்பன் ஆகவும், அரங்கன் ஆகவும் தவம் செய்கின்ற போது, நீ அவர்களை அடையத் தவம் செய்வது வீண் ஆகும்!

தான்ாக வரும் பேற்றுக்காகத் தவம் செய்ய வேண்டுமா? ஆதலால் உன் காம நோன்பை விட்டு விடு என்பது இப் பருவத்தின் அடிப்பைப் பொருள்.

துடிஇடைப் பிடிநடைக் கயல்விழிக் குயில்மொழித்

துவர்.இதழ்த் தவளநகை யாள் சோதிவா னவர்பிரான் ஏதுவில் சாபம் தொடர்ந்துகல் படிவமா கப்

படியினில் பாதயங் கேருகத் துளினால்

பழையதோர் மேனியா கப்

பழமறை பராவுகோ தமனிடத்து ஆக்கிய

பரம்பரன் அஃது அன்றி யும்