பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. காமநோன்புப் பருவம்

சொல்தமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை

சூட்டியும் தொண்டுபுரி வார்

தொண்டர்தம் தொண்டர்என்று அவர்கள்பின் தொடரும்ஒரு

சோதிஇரு கரையினோ டும்

எற்றுதெண் திரைமண்டு பால்ஆழி யுள்நின்றும்

இடபகிரி சேடகிரி மீது

இருவராய் உனைஎய்த உச்சிமேல் மாதவம்

இயற்றவே பொன்னிநடு வாய்

உற்றுளான் மதிமுகம் தெற்குவைத்து அந்நகருள்

ஒருவர்அலர் இருவர்கா வல்

உம்பர்அமு தும்திருவும் எய்துதற்கு எவர்களே

உலகத்தில் எதிர்கொண்டி டார்?

கற்றவர் புகழ்ந்ததென் புதுவைஅந் தணர்புதல்வி

காமநோன் பதுதவிர்க வே!

காரிதரு மாறர்திரு மகளாய கோதையே!

காமநோன் பதுதவிர்க வே! (107)

உலக வழக்கு ஒழியாமல் வழங்கிவரும் தமிழால் ஆகிய பாமாலையை நிலை பெறச் செய்தும், கையால் தொடுத்த பூமாலையைச் சூட்டியும் தொண்டு செய்பவர்களே தொண்டர்தம் தொண்டர் என்று கொண்டு, திருமழிசை ஆழ்வார் கணிகண்ணன் ஆகியோரின் பின்னே தொடர்ந்து சென்றவன் ஒப்பற்ற ஒளிவடியாகிய திருமால்,

இரு கரைகளையும் மோதுகின்ற தெள்ளிய அலைகள் செறிந்த பாற்கடலினின்று நீங்கி, சோலைமலை, வேங்கடமலையின் மேல் அழகனாகவும் அப்டனாகவும் இருவடிவம் கொண்டு உன்னை மணந்து கொள்ளும் பொருட்டு, அம் மலைகளின் உச்சிமேல் பெருந்தவம் இயற்றுகின்றான்.

காவேரியின் நடுவிடத்திலே உற்ற திருவரங்கன் தன் மதி போன்ற முகத்தைத் தெற்கு நோக்கி (உன் ஊரை நோக்கி) வைத்து உன்னை அடைவதற்கு அறிதுயில் கொண்டுள்ளான். அவனுக்கு ஒருவர் மட்டும் காவல் அல்லர். மண்மகளும் மலர் மகளும் ஆகிய இருவர், மாயோன்