பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் 16

பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு இறுதி மூன்று பருவங்களும் மாறும். பருவத்துக்கு ஒன்பதோ பத்தோ பாடல் வரலாம்.

சிதம்பரப் பாட்டியல் ஆண்பாலுக்கு உரிய சிறுபறை, சிற்றில் சிறுதேர்க்கு மாற்றாகக் கழங்கு அம்மனை, ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாலுக்கு வரும் என்கின்றது.

பாட்டியல் நூல்கள் கூறுவதைத் தொகுத்துப் பார்த்தால் பிங்கலந்தை மட்டும் பருவ எண்ணிலும் அகவையிலும் மாறுபடுகின்றது. பிங்கலந்தை, கூறுதல் கூறல், பூண் அணிதல், கச்சினோடு உடைவாளை விரும்பத் தரித்தல் என்ற மூன்று பருவங்களை இணைக்கின்றது.

பிற நூல்கள் சில பருவங்களை மாற்றி அமைக்கின்றன. அவ்வளவே வேறுபாடு, பெண்பால் பிள்ளைத் தமிழ் பற்றி ஒரளவு தெரிந்து கொள்ளத்தான்் வேண்டும். குழமணம், காமன் நோன்பு, நீராடல், பாவையாடல், கழங்கு, பந்து, சிறுசோறு, சிற்றில், ஊசல் எனப் பிங்கலத்தை கூறுகின்றது.

பன்னிருபாட்டியல் சிற்றில், சிறுசோறு, குழமகன், ஊசல், காமன் தோன்பு என்பனவற்றைப் பெண்பாலுக்குச் சேர்க்கின்றது.

இலக்கண விளக்கமும் சிதம்பரப்பாட்டியலும் கழங்கு, அம்மானை, ஊசல் எனக் கூறுகின்றன.

பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியன அம்மானை, நீராடல், ஊசல் என்பன மூன்றே என்று பெரும்பாலான பாட்டியல்கள் கூறுகின்றன.

பாடல் எண்ணிக்கையிலும் வகையிலும் அகவை அளவிலும் சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றை இங்கு ஆயவேண்டியதில்லை.

மேலே சொன்ன இலக்கண நூல்கள் பெரும்பாலானவற்றின் கருத்தை ஒட்டி முதன்முதலில் தோன்றிய நூல் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழே' எனலாம். அது ஒட்டக்கூத்தர் இயற்றியது. இதில்,

1. காப்புப் பருவம் (II) 5. அம்புலி (73) 2. செங்கீரை (11) 6. சிறுபறை の 3. முத்தம் (10) 7. சிற்றில் (ZE) 4. வாரானை (II) 8. சிறுதேர் (3)

என இதில் எட்டுப் பருவங்களே உள்ளன. சப்பாணி தாலப் பருவங்கள் சிதைந்து அழிந்து போயிருக்கலாம். அதுமட்டுமல்ல சிறுபறை,