பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 * பொழிப்புரை த. கோவேந்தன்

புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியத்திலும் இராவணனின் மகன் சேயோன் மறைகையில் பிள்ளைப் பருவம் பாடப்படுகிறது.

பிள்ளைத்தமிழ் பெருகிக் கண்டபடி பரவுவது கண்ட அறிஞர், அதை ஒருவழிப் படுத்துப் பாய்ச்சித் தமிழுக்குப் பெருமை சேர்க்க முயன்றதன் பயனாகப் பல இலக்கண நூல்கள் எழுந்தன.

முதலில் இலக்கணம் வகுத்த நூல் பிங்கலந்தை. அது பருவங்கள் பத்துடன் நிறுத்தாமல் அதற்கு மேல் சில பருவங்களை இணைத்தது.

அது ஒவ்வொரு பருவத்துக்கும் அகவை இன்னதென்றும் குறிப்பிட்டது.

குழந்தையின் மூன்றாம் திங்கள் வரை காப்பு குழந்தையின் ஐந்தாம் திங்கள் வரை செங்கீரை குழந்தையின் ஏழாம் திங்கள் வரை தாலம் குழந்தையின் ஒன்பதாம் திங்கள் வரை சப்பாணி குழந்தையின் பதினொரு திங்கள் வரை முத்தம் குழந்தையின் ஒராண்டு வரை வருகை குழந்தையின் ஒன்றரையாண்டு வரை அம்புலி குழந்தையின் இரண்டு ஆண்டு வரை சிறுபறை குழந்தையின் மூன்றாம் ஆண்டு வரை சிற்றில் குழந்தையின் நான்காம் ஆண்டு வரை சிறுதேர்

என்பவை பருவத்துக்குப் பிங்கலந்தை வகுக்கும் அகவைகள்.

பன்னிருபாட்டியலும், வெண்பாப்பாட்டியலும் குழந்தைக்கு மூன்று முதல் இருபத்தொரு திங்கள் வரையுள்ள ஒற்றித்த திங்கள்களைப் பத்துப் பருவங்களுக்கு முறையே உரியவாகக் கூறுகின்றன.

நவநீதப் பாட்டியல் மூன்று திங்கள் முதல் இருபத்தொரு திங்கள் வரை பத்துப் பருவமும் பாடுதலோடு ஐந்து, ஏழாம் ஆண்டு வரையிலும் பாடுதலும் உண்டு என்கின்றது.

சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன மூன்றும் பாடல் அளவில் குறைந்தும் வரலாம். விருத்தம், வண்ணம் (சந்தம்) ஆகிய பாக்களால் பாடவேண்டும்.