பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 172

வெண்ணெய்தான்் முன்புகட்டு உண்டபடிறு அன்றியே

வேறுபல படிறும்உடை யான்

மேய்ப்பதுஆன் நிரைமரபு கோபாலன் விசயன்தன்

மிக்கதேர்ப் பாகன்ஆ னான்

மண்ணில்ஆ சையைவைத்த ஐவர்தம் தூதாய்

மடக்கோலை யைச்சுமந் தான்்

மற்றும்.எக் குற்றம்என்று எண்ணுவேன் அவனைநீ

வலியவேட் கின்றது.என் னோ?

கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே!

காமநோன் பதுதவிர்க வே!

காரிதரு மாறர்திரு மகளாய செல்வியே!

காமநோன் பதுதவிர்க வே! (113)

தலைமை பொருந்திய மயக்கந்தரும் தோள் மால் அழகன் எனும் மாநிலம் அஃது உண்மையே! அஃதன்றி வேதந்தான்் அவனை ஆண் அல்லன் பெண் அல்லன், அலி அல்லன் என்பதுடன் அரிய குறள் உருவன் என்று குறும்பாய்க் கூறும் உலகமும், மறைகளும் இவ்வாறு கூறுவது அவன் புகழே ஆனாலும், உலகம் அவனை இழித்தும் பேசும்.

வெண்ணெய் தான்் முன்பு திருடி உண்ட வஞ்சனை அல்லாமலே வேறுபல வஞ்சனைச் செயல்களும் உடையவன். அவன் மேய்ப்பது ஆநிரை(பசுக்கள். அவன் குலமோ அறியாமை விஞ்சிய ஆயர்குலம் அருச்சுனனுக்கு மிக்க தேர்ப்பாகன் என்னும் ஏவல் தொழிலைச் செய்தான்்.

நானிலம் ஆள் ஆசை கொண்ட ஐவர்க்குத் துரதனாய் மடக்கிய ஒலையைக் கழுத்தில் கட்டிச் சுமந்து சென்றான். இவன் செய்தவை இன்னும் எத்தனை இழி செயல்கள் என்று அடுக்குவேன்!

'உன்னை மணப்பதற்குத் தகுதியற்றவனை நீ வலிந்து காமுறு (விரும்பு)வது ஏனோ? இடம் அகன்ற புத்துரர் விளங்கவரும் கோதையே! காம நோன்பு தவிர் காரிதரு மாறர் திரு மகளாய செல்வியே! ஆண்டாளே அவனை அடைவதற்காக நீ மேற் கொண்ட காம நோன்பினைத் தவிர்!

தினகரன் எனக்கதிர் எறித்துஎழு கவுத்துவச்

செய்யகுளிர் மணியைமார் பில் சிங்கா தனம்பெற அமைத்துநாண் மலர்பெய்

சிறப்புஉனக்கு உதவும் பரன்