பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

"வைணவ புராணத்தில் சிவாதி தேவதைகளின் நிந்தை விஷ்ணுவின் துதியினால், விஷ்ணு உபாசனையில் தீவிரமாக ஈடுபடுவதற்குக் காரணமாகும். அவ்வாறே சிவபுராணத்தில் காணப்படும் விஷ்ணு நிந்தனைகளும் அந்த விஷ்ணுவை வழிபடுவதை விட்டு விடவேண்டும் என்னும் கருத்தன்று. அந் நிந்தை சிவ வழிபாட்டில் ஊற்றம் உண்டாகும் பொருட்டேயாகும்.

"புராணங்கள் முதலிய நூல்களில் காணப்படும் அன்னிய தேவதைகளின் நிந்தனை, ஒரு தேவதையின் வழிபாட்டில் ஊற்றம் பெரும் பொருட்டேயாம். மற்ற தெய்வங்களின் விட்டுவிட வேண்டும் என்பதற்காக அன்று.

'இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்வது பொருத்தமாக இருக்கும். வேதத்தில் அக்கினி கோத்திரத்துக்கு இரு காலங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று சூரியோதயத்துக்கு முன்பு, மற்றொன்று சூரியோதயத்திற்குப் பின்பு. சூரியோதயத்துக்கு முன்பு செய்தல் வேண்டும் என்று கூறும்போது, பின்பு செய்வது தவறு என்றும், பின்பு செய்தல் வேண்டும் என்று கூறும்போது முன்பு செய்வது தவறு என்றும் வியாசபகவானே கூறியுள்ளார். அதனால் வியாசர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர் என்று அவரை s7FGUTu07?

"அவர் சொல்லும்படி சூரியோதயத்துக்கு முன்பு செய்வதும் பின்பு செய்வதும் தவறு ஆகின்றது. அதனால் அக்கினிகோத்திரமே தவறு என்பது வியாசர் நோக்கமாயிருக்குமா? இருக்கவே இயலாது.

"சூரியோதயத்துக்கு முன்பு செய்வதை வற்புறுத்தும் பொருட்டுப் பின்பு செய்வது தவறு என்றும் துரியோதயத்துக்குப் பின்பு செய்வதை வற்புறுத்தும் பொருட்டு, முன்பு செய்வது தவறு என்று கூறியதன்மூலம் இரு காலத்திலும் செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதே வியாசர் கருத்து. இவ்வாறு கொள்ளாவிடில் அக்கினி கோத்திரமே செய்யாமல் விட்டுவிட நேரும்.

'இந்த எடுத்துக்காட்டின்படி நோக்கினால், விஷ்ணு வழிபாட்டை வலியுறுத்தச் சிவ நிந்தனையும், சிவ வழிபாட்டை வலியுறுத்த விஷ்ணு நிந்தனையும் செய்யப்பட்டுள்ளது என்றே கொள்ளுதல் வேண்டும்.

'நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்றும் இவனை ஒன்றறும் மனத்து உள்ளுதல் வேண்டும் என்பதும்,

"புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் என்றும்,